பொம்மலாட்டம்
பொம்மலாட்டம்...!
18 / 05 / 2025
வாழ்க்கை ஒரு பொம்மலாட்டம்
அதில் தினம் ஆட்டப்படும்
உயிர் பொம்மை நான்.
என் தலையை சுற்றிய
கயறு என்மனைவியின் கையில்
அவள் இழுப்பதுபோல்தான்
என் தலை ஆடவேண்டும் .
என் வலக்கை சுற்றிய
கயறு என் தாயின் கையில்
அவள் ஆட்டுவிப்பதுபோல்தான்
என் கை ஆடவேண்டும்.
என் இடக்கையின் கயறு
சகோதர சகோதரியின் கைகளில்
இஷ்டம்போல் ஆட்டுகிறார்கள்.
என் வலது காலின் கயறு
என் தந்தையின் கைகளில்
அவர் வகுத்த பாதையில்தான்
நான் நடக்க வேண்டும்
என் இடது காலின் கயறு
சொந்த பந்தங்களின் கைகளில்
அவர்களை மீறி நடக்கக்கூடாது
என் இதயத்தின் கயறு மட்டும்
என் நண்பர்களின் கைகளில்
அவர்கள் அதை பத்திரமாக
காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆக மொத்த கயிறுகளையும்
முடித்து ஆதார கயிறை
அவன் கையில் வைத்துக்கொண்டு
ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறான்
அந்த ஆண்டவன்தான்.
இந்த பொம்மலாட்டத்தில்
தினம் ஆடிக்கொண்டிருக்கும்
ஆட்டுவிக்கப்படும்
உயிர் பொம்மை நான்.