செவி

௦௩௧௨௨௦௨௫

செல்வவிநாயகம்..
பெற்றோர்.. ஆசிரியர்.. உற்றார்
உறவினர்.. நண்பர்கள்
யாவரும் இவரைப் பற்றி
கூறுவர் இவர் போல யாரென்று..

செல்வ விநாயகம்.. இவர்
எப்போதும் நடுநாயகம்
இன்னா செய்தாரை
ஒறுத்தல் அவர் நாண
செய்வார் நன்னயம்...

தனது கருத்துக்களில்
தீர்க்கம்.. இருந்தும் பிறர்
உணர்வுகளுக்கு மதிப்பு
அளிப்பது இவரது வழக்கம்...

வெள்ளைப் புறாக்களை
கைகளில் வைத்துக்கொண்டு
வாக்குவாதம் செய்வார்...
இவரது அணுகுமுறையில்
வெள்ளைக் கொடிகளே
இவரை நாடி வரச் செய்வார்..

அமைதியும் ஆனந்தமும்
உற்சாகமும் உத்வேகமும்
நண்பர் எவருக்கும் தேவை
எனில்.. அவர்கள் இவரோடு
பயணிக்கலாம்.. சொர்க்கம்
பக்கமாய்த் தோன்றும்..
வசந்தங்கள் வரமாய் தோன்றும்..

இவர் நட்பை அலசுவதில்
தோராயம்.. தோழமை
ஈர்ப்பதில் மிக துல்லியம்...
இவர் போன்றோர்க்கு
வெற்றி எப்போதும் நிச்சயம்..

இவர் இருக்கும் இடம்
தரும் ஒரு வைப்ரேஷன்..
கருத்து வேறுபாடுகளுக்கு
வைப்ரேஷன் ஐசொலேஷன்..

மலர்களின் மொட்டுக்கள்
தென்றல் பட்டு பூத்துக் குலுங்கும்
செல்வ விநாயகத்தின்
ஆலோசனைகள் முட்களையும்
பூக்க வைக்கும்...

மழை மாதம்.. கார்த்திகை தீபம்
ஐயப்ப சரண கோஷம்..
இனிமையானவை.. இவரது
பண்பும்.. அன்பும் அப்படியானவை..

செல்வ விநாயகம்
வசந்த வாழ்த்துகள்.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துகள்..

🌹🙏🤝👍😍❤️

எழுதியவர் : இரா. சுந்தரராஜன் (3-Dec-25, 11:23 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
Tanglish : sevi
பார்வை : 6

மேலே