குறிஞ்சி முதல் நெய்தல் வரை

வினைத்திட்பம் என்பது
ஒருவ(ன்)ள் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற...

கல்லூரிக் காலந்தொட்டே
நடையில்.. உடையில்
உரையாடலில்.. துணிவில்..
பார்ப்பவர் மூக்கில் விரல்
வைத்து வியக்கும் அளவு
வசீகரம்.. அது ராஜ்ஜியம்
ஒன்றின் இளவரசி என
மாதரசி தோழி சங்கமேஸ்வரி..

ஆகஸ்ட் பதினைந்து.. அது
இந்தியாவின் ஆனந்தம்..
ஆகஸ்ட் ஐந்து.. அது சங்கரி
பெற்றோரின் பேரானந்தம்..
முத்து ஒன்று கெத்தாகப்
பிறந்த புது அத்தியாயம்..

சங்கம் அமைத்து
செந்தமிழ் வளர்த்தனர்
சங்கப் புலவர்கள்...
சங்கரி பெற்று
தங்கமாய் வளர்த்தனர்
இவர்தம் பெற்றோர்...

குன்னூர் குறிஞ்சி நிலம்
வாழ்ந்த இந்த குறிஞ்சி மலர்
இன்று நெய்தல் நிலம் வாழ்கிறது...
அன்பைப் பெய்தல்
குணமாய்க் கொண்டு..

தமிழும் ஆங்கிலமும்
சங்கரிக்கு அத்துபடி...
நட்பைப் பேணுவதில்
மேலும் பல படி.. செயலில்
நினைத்தது நினைத்தபடி.. இதை
இங்கு சொல்லியாக வேண்டும்
உள்ளதை உள்ளபடி...

சங்கரி...
இந்த புதுமைப் பெண்ணைக்
கண்டு... பாரதி மேலும்
எழுதியிருப்பான் சிலவரி...
அதில் தெரியும் முகவரி...

நடமாடும் நந்தவனங்கள்
கல்லூரியின் பூவினங்கள்..
கல்லூரியில் மாணவியரை
இவர் மாணவருக்கு
இணையாய் வழி
நடத்திய அழகு.. அது
கல்லூரிக்கே பேரழகு..

அன்புத் தோழி சங்கரி..
நீ குன்னூர் குளிராய்...
அழகு தமிழாய்.. ஓயாத
முத்து நகர் கடலலையாய்...
வசந்தங்கள் வசமாக
வளங்கள் வரமாக..
வசந்த வாழ்த்துகள்.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துகள்..

அன்புடன்.. நண்பன்...
ஆர். சுந்தரராஜன்.
🪷💐😍

எழுதியவர் : இரா. சுந்தரராஜன் (26-Nov-25, 11:12 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 0

மேலே