கல்லிடை கலைவாணி
211125
ஒரு சரிகமபதநி.. இன்று
பிறந்தநாள் கொண்டாடுகிறது..
அதன் பெயர் கோமதி..
இவருக்கு பாடப் பிடிக்கும்
பி.சுசிலாவின் சிட்டுக்குருவி..
கார்த்திகை மாதத்து
தீபங்கள் பார்த்து பிறந்தவர்
தாமிரபரணி ஆற்று
நீர் பருகி வளர்ந்தவர்..
சுப்ரபாத பொழுதுகளில்
புத்தகங்கள் ஊன்றி படித்தவர்..
இவர் வானளவு உயர்ந்த
உள்ளத்திற்கு சொந்தக்காரர்..
எனினும் மண்ணில் மனித
உள்ளங்களை உயர்ந்து
மதிக்கும் பந்தக்காரர்..
பேராசிரியர் இவர்..மின்
அணுவியல் நுணுக்கங்கள்..
மின்காந்த அலைகளை
மாணவர்களுக்கு அறிமுகப்
படுத்தும் விதம்.. அது
சந்தனக் காற்று வீசும்
ஒரு நந்தவன சந்தோசம்..
மின்னணுவியல் அறிவு
கொண்டு வெற்றி இலக்குகளை
அவர்கள் அடைவது நிச்சயம்...
இவரது கற்பித்தல், "ஐயோ..
அய்யய்யோ" வகுப்புகள்
சீக்கிரம் முடிந்து விட்டதே
என்று சொல்லும் ரகம்..
இவரது வகுப்புகளில்
இருப்பது மாணவர்கள்
வாங்கி வந்த வரம்..
தொட்டனைத் தூறும்
மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு...
வெட்டிய ஒரு கேணியில்
ஊரார் பயன் பெறுவர்...
பேராசிரியர் இவர் மாணவர்
ஒவ்வொருவருக்கும் வெட்டிக்
கொடுக்கும் அறிவுக் கேணியில்
உலகத்தார் பயன் பெறுவர்..
ஊறும் அறிவில் அறிவுத்
தாகம் தீர்க்க வைக்கிறார்..
உலகம் வளர தன்
பங்கைக் கொடுக்கிறார்...
எட்டுத் திசைகளும் சென்று
திரவியம் தேட, கோமதி கற்றுக்
கொடுக்கும் நேர்த்தியில்
ஒட்டுமொத்த உலகம் உயரும்
சந்ததிகள் செழிக்கும்..
கோமதி... இவர்
தம் பெற்றோரின் இளவரசி..
இல்லத்தின் அரசி.. மாணவச்
செல்வங்களின் பேரரசி...
வாழ்வில் என்றும்.. அன்பு
ஆனந்தம் நிம்மதி கை கூடி
வளங்கள் வரமாக, வானமும்
வசமாக கோமதிக்கு
வசந்த வாழ்த்துக்கள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
அன்புடன் தோழன்..
ஆர். சுந்தரராஜன்.
👍😍🪷🙏

