முருகா முருகா
முழு முதல் கடவுள் தம்பியே
முழுதாய் வந்தோம் உன்னை நம்பியே
மனசெல்லாம் உன் நினைவே முருகா
மனதார வேண்டினேன் வா வா
அரோகரா என்று சொல்லி
அன்பாக உன்னை எண்ணி
கடும்பாரை கடந்து வந்தோம் முருகா
கும்பிட்டும் கைவிட்டா அழகா
எனக்காக ஓடோடி வா வா
உன் பெயரை தினம் ஒதி
ஷஷ்டி தினம் பாடி
உருகி உருகி உனை வேண்ட முருகா
என் கண்ணீரை துடைதிட வா வா
என்னோடு நீ இருந்தால் போதும்
வேறென்ன என் மனம் தேடும்.
கடைக்கண் பார்வை போதும்
என் ஜென்மம் அங்கேயே முடியும்
என்னை உன் மனம் அறியும்
வேறு யாருக்கு என் குறை புரியும்
என் உலகமே நீதானே தலைவா
உன் மகனுக்கு அருள் செய்ய வா வா