ஓசிவனே
ஓ..சிவனே !
16 / 05 / 2025
ஓ..சிவனே !
நீ கொடுத்த கண் கொண்டு
எதையுமே பார்க்க முடிவதில்லை
அழுவதை தவிர...
நீ கொடுத்த கை கொண்டு
எதையுமே தடுக்க முடிவதில்லை
கைகட்டிக்கொண்டு
இருப்பதை தவிர...
நீ கொடுத்த கால் கொண்டு
எதையும் உதைக்க முடிவதில்லை
கால் கடுக்க
நிற்பதை தவிர..
பாழும் உலகை கெடுக்கும்
பேதங்களை பொசுக்கிட
இந்த ஊனக்கண்கள் வேண்டாம்
உன் நெற்றிக்கண்ணை கொடுத்திடு
எரித்து சாம்பலாக்கிட
லஞ்சலாவங்களை போக்கிட
சூம்பிப்போன கைகள் வேண்டாம்
இருக்கைகளில் உன்
சூலாயுதத்தை கொடுத்திடு
குத்தி கிழித்திட..
மனித நேயமற்ற மிருகங்களை
கண்டு நடுங்கும் கால்கள் வேண்டாம்
இரு கால்களில் உன்
நர்த்தனைத்தை கொடுத்துவிடு
அண்டம் நடுங்க ருத்ர தாண்டவம் ஆடி
ஆணவ முயலகனை
காலில் மிதித்து நசுக்கிட...