உன் புன்னகைதான் எனக்குக் கவிதைப் புத்தகம்

புத்தகத்தின் பக்கத்தில்
மயிலிறகிற்குப் பதிலாக
புன்னகை புரியும் உன் புகைகிப்படத்தைத்தான்
வைத்து திருப்பித் திருப்பிப் பார்க்கிறேன் ரசிக்கிறேன்
எழுதியவனுக்கு அவமதிப்புத்தான்
புத்தகத்தை
எழுதியவன் கம்பனோ காளிதாசனோ ஷெல்லியோ
யாராய் இருந்தால் எனக்கென்ன
உன் புன்னகைதான் எனக்குக் கவிதைப் புத்தகம்