என் கனவு இது ஆனால்
என் கனவு இது ஆனால்..!
புன்னகையாய் முகம்
விரித்து சிரிக்கும்
பூக்களுடன்
பயணிக்கவும் பேசவும்
விரும்புகிறேன்
நடத்துனரின்
விசில் சத்தம்
கனவு கலைந்து
விழித்து பார்த்து
அலுத்து சலித்த
முகங்களாய்
என் முகமும்
கீழே இறங்கி
பரிதாபத்துக்குரிய
மனிதனாய்
அலுவலகம் சென்று
கொண்டிருக்கிறேன்