அழிவை சந்தித்த நேரம்

அழகிய நகரில்
அமைதியின் ஊற்றில்
ஆனந்த ஊஞ்சலில்
அன்பின் வசம்தன்னில்
ஆடிவரும் தென்றலென
அச்சமின்றி அகமகிழ்ந்து
அத்தனையும் சொந்தங்கள்
ஆலமர விழுதென ..

அந்தப்பக்கம் இந்தப்பக்கம்
அசராத பாசங்கள்
ஆண்டவன் தந்திட்ட
அரண் கொண்ட இல்லங்கள்
அந்நிய இராணுவத்தின்
அக்கிரம செயல்களால்
அழிந்ததே அவர்களின்
ஆனந்த சொர்க்க பூமி

அதுவே அவர்கள் தாய்நாடு
அங்கேயும் இங்கேயும் எங்கேயும்
ஆலாய் பறந்து திரிந்து
அவனிதனில் அங்கலாய்க்கும்
ஆதரவின்றி அனாதைகளாய்
அலைந்து அலைந்து
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அத்தாய் நாட்டின் மக்கள் ..

எழுதியவர் : பாத்திமா மலர் (4-Feb-25, 11:47 am)
பார்வை : 23

மேலே