ஆண்யா பெண்யா
என்ன அண்ணே அந்த வீட்டில் " ஆண்யா,
ஆண்யா"ன்னு யாரோ சொல்லறாங்க.
@@@@@
அட அவுங்க சொந்தக்காரப் பொண்ணுக்கு
என்ன குழந்தை பிறந்திருக்குதுன்னு
கேட்டிருப்பாங்க. ஆண் குழந்தையா
இருக்கும். அதைத்தான் 'ஆண்'யானு
சொல்லியிருப்பாங்க.
@@@@@@
ஓரளவு எனக்குத் தெரிஞ்சவங்க தான்.
வா கேட்டுப்பார்க்கிறேன்.
ஏனுங்க நம்ம சொந்தக்காரப் பொண்ணு
யாருக்காவது ஆண் குழந்தை
பிறந்திருக்குதுங்களா?
@@@@@@@@@
இல்லீங்களே.
@@@@@@@
"ஆண்யா, ஆண்யா" யாரோ சொல்லிட்டு
இருந்தாங்களே.
@@@@@@
ஓ ... அதுவா? என்ற தம்பி மனைவிக்குப்
பெண் குழந்தை பிறந்திருக்குதுங்க.
அந்தக் குழந்தை பேரு தான் ஆண்யா.
இந்திப் பேராம். அந்தப் பேருக்கு என்ன
அர்த்தம்னு தெரியாதாம்.
@@@@@@
அப்பிடீங்களா? என்ற தங்கச்சிக்கும்
பெண் குழந்தை பிறந்திருக்குதுங்க.
அந்தக் குழந்தைக்குத் தாய் மாமன் என்ற
முறையில் 'பெண்'யானு பேரு வச்சு இந்திப்
பேருன்னு சொல்லிட்டாப் போச்சு. சனங்க
எல்லாம் "பெண்யா" ஸ்வீட்டு இந்தி
நேமுன்னு சொல்லிப் பாராட்டுவாங்க.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Aanya = Grace, favour.