நீ நீயாக

நீ நீயாக

சிக்கனமா சிந்திக்க
சிதறு தேங்காய வாய் பிழக்க
வீசும் காற்று விவரம் கேட்கிறது !

தத்துவம் சமநீதி கொள்கை
மகத்துவம் மண்டியிட
மாண்டோர் மைதானம்
மனக்குமுரல் விலாசம் வேண்டுகிறது !

கந்தல் கதிர் ஆடை
கட்டை தடி கண்ணாடி
கடல் கடந்து கண்ட கல்வி
கடுகளவு சிந்தா உதிரம்
ஓர் ஊரை உழுக்கி
உயிரையும் பறித்ததே !

உத்தமன் கோடி வடக்கில் வாயாட
படித்தவன் வஞ்சக வலை விரிக்க
பாராளுமன்ற கதவு பரிபாசை மொழியுது
பக்குவம் தேவை பங்கை கூறுபோட
பகுத்தறிவு பட்டம் பரிவட்டம் தேட
பிளவு உன்னை நெறிப்படுத்தும்
பின்னால் முன்னால் ஓர் நினையுறுத்தல்
சிக்கனம் சோறும் போடும்
சீராய் நாளும்
சிந்தனையை சீராய் வேய
நீ நீயாக வாழக் கற்றுக்கொள் !

எழுதியவர் : மு.தருமராஜு (4-Feb-25, 12:47 pm)
Tanglish : nee neeயாக
பார்வை : 31

மேலே