செயலிழப்பு
சட்டென்று அடித்து பெய்யும் பேய் மழை
பட்டென்று வெடிக்கும் அணுகுண்டு வெடி
படாரென்று பேசும் கோபக்கார மனிதன்
திடுப்பென்று நடக்கும் சம்பவம்
எதிர்பாரா குறிக்கிடுகள் பலவும்
மனதை நிலை குலையச் செய்து
பதற்றமிக்க சூழ்நிலையை உண்டாக்கி
என்னை ஒரு வழியாக முடக்கி, உள்ளிழுத்து
தற்காலிகமாக செயலிழந்து நிற்கிறேன்..