சோதனை கூட எலி
புரியாதது பாதி - வாழ்வில்
புரிந்த மீதியிலும்
பொய்கள் சரிபாதி
மிச்ச சொச்சத்திலும் கூட
உணவும் உணர்வும் யாவும்
உளவியலின் ஆய்வின் உள்ளீடாக
உலகமறியா இவனின் விதி
மாண்டு போகும் காலமுன்
மெய்யும் உயிருமான உருவை
முயன்று கண்டிடும் பேராசையோடு
சோதனை கூட எலி

