பாத்திமா மலர் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : பாத்திமா மலர் |
இடம் | : அண்ணா நகர் , chennai |
பிறந்த தேதி | : 07-Oct-1950 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 9243 |
புள்ளி | : 2294 |
கண் சிமிட்டி காதல் செய்வான்
கண்ணாம்பூச்சிக் காரன்
காதலுடன் பார்க்கும்போது
மறைந்து நின்று சிரிப்பான்
ஆயிரம் கொள்ளளவு
அந்தரத்தில் சொகுசு
அனுபவிக்க ஆசை
ஆனாலும் அடிமனதில்
இனம் புரியா ஏக்கம்
மஞ்சள் வண்ண பட்டு சட்டையில்
பார்த்தாலும் போதும் பொங்கி வரும் ஆசை
அள்ளி எடுத்து கடித்து தின்ன ஆசை .
காதல் எனும் மலர்செடி
இதயமெனும் தோட்டத்தில்.....
விதையோ
அவன் விதைக்கவில்லை
தவமோ இருக்கவில்லை
நேரமோ ஒதுக்கவில்லை
கிடுகிடுவென தானே
ஊன்றிய விதையில் வேர்விட்டு
தழைத்து வளர்ந்து அவனையே
அசைத்து பார்க்கிறது
அவனே ஆட்டம் கண்டுவிட்டான்
காதலும், கவியும், இன்பக் கனவுகளும்
அவன் இதயத்தை ஆட்கொண்டு விட்டன
இதுவும் ஒரு விந்தையே/
மெல்ல மெல்ல அவன் உள்ளமெல்லாம்
காதல் மயம்
மிதக்கின்றான் காதலில்
நீந்துகின்றான் இன்பக் கனவுகளில்
காதலுக்கு உயிர் கொடுத்து
கற்பனையில் மெருகேற்றி
காதலெனும் களத்தில் அவன் ..
அவன் எண்ணமெல்லாம் காதல்
பார்வையில் காதலின் தேடல்
பரிதவிக்கும் மனமதில் பொக
உன் வீழாவிற்கு
பட்டாசு வெடித்தாய்
காற்று மண்டலம் மாசு பட...
பறவைகள் பயந்தோட..
கூட்டம் கூடினாய்
தெருக்களைக் குப்பயாக்கினாய்
திருவிழா என
உணவை வீணடித்தாய்..
பூ பழம் பால் என
அனைத்தையூம் ஒரே நாளில் வீசி மகிழந்தாய்..
கல்யாணம் என்றாலும்
காதுகுத்து என்றாலும்
ஆடம்பரச் செலவாக்கினாய்...
இறந்துவிட்டால்
இடுகாடு செல்லும் வரை
சாலையை நிறுத்தி
ஆரவாரம் செய்தாய்
இன்று
யார் இறந்தாலும்
அனாதைப் பிணமாய்
அருகில் உறவின்றி எரியும் உன் உடல்
ஊர் சுற்றினாய்...
பெற்றோரை மறந்து
பெல்ஜியம் சென்றாய்
உறவினரை மறந்து
UK சென்றாய்..
பணம் என ஆடினாய்
உழைக்க மறந்தாய்...
உலாசமே வாழ்க்கை
என
ஏழைகளை அடிமையாக்கினாய்...
எல்லி நகைத்த
உன்னால் என்றான் உனக்காக என்றான்
எண்ணங்கள் யாவிலும் நீயென்றான்
அவளும் அவனிடத்தில் நிறைந்து நின்றாள்
அவள் அவன் என்ன மாய கண்ணனோ/
இவன் என்று மனசிற்குள் செல்லமாக ,
உண்மை அன்பு கொண்ட உள்ளங்களில்
உணர்வுகளும் எண்ணங்களும் ஒன்றாயின
ஆனாலும் ஜாதியும் மதமும் வேறு வேறு
இவற்றை உணராத வயதில்
தன்னைத் தாங்கிக் கொள்ள துணை மட்டும்
தேடி நிற்கும் பருவம்
அது இயற்கையின் நன்கொடைதான்
இறைவன் இணைத்திட நினைக்கும் போது
மனிதன் பிரித்திட முடியாது ,முடிவாக
இருவர் குடும்பமும் இணைந்து நின்றே
இணைத்து வைத்தனர் மகிழ்வாக ,
அந்த பிஞ்சு உள்ளங்கள் இரண்டும்
சோலை கிளிகளாய் ...
எதிர்பார்ப்பு இல்லை
வீண் வேதாந்தம் இல்லை
ஆரம்பம் முதல் தொடர்ந்து
என்னில் அவன், அவனுள் நான்,
பார்ப்பவர் கண்களுக்குள் ஏன் /
அவர்கள் மனசுக்குள்
புலப்படும் இலக்கணம்
அது எது/
தூய்மையின் இருப்பிடம்
கலப்படமில்லா அன்பு
தையிரியம் ஊட்டும்
தாய்மையின் நிழலாக
உயிர் உள்ளவரை உடலாக
தொடர்வது எது /
அதுவே நட்பு,
நட்புக்கு மறு பெயர் நிழல் .
மாலையாக கழுத்தில் தொங்கும்
துப்பட்டாவின் அசைவில்
சோலைக் காற்று வீசுது
மௌனமாய் சிரிக்கும் புன்னகையில்
மாலை மஞ்சள் நிலா
நெஞ்சில் வந்து போகுது
மயக்கும் இருவிழிகளின் பனிப்பொழிவில்
காஷ்மீரத்து பனிநீரோடை உடைந்து
உள்ளே துள்ளி ஓடுது !
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்
எங்கள் செல்ல குழந்தை நீ
உன்னை தாலாட்டும் உள்ளமெல்லாம்
புன்னகையில் பூக்குதம்மா
உன் புன்னகையில் எங்கள்
மனம் எல்லாம் நிறையுதடி
தங்க மகள் நீ எங்கள் தங்கமே
இன்றுனக்கு பிறந்தநாள்
எங்கள் மனம் நிறைந்து வாழ்த்துகிறோம்
நீ பல் கலையும் கற்று
பண்புடனும் புகழுடனும் நலமுடனும்
வாழவேண்டும் என எங்கள்
மனசெல்லாம் மகிழ்ந்து வாழ்த்துகிறோம்
என் செல்ல பேத்திக்கு
அன்புள்ள அம்மம்மாவின்பாசம்
நிறைந்த முத்தங்கள் ம்ம்ம்ம்ம்ம்ம்மா......
அன்புள்ள அம்மம்மா அம்மப்பா
சஜிபெரியம்மா, லதா பெரியம்மா,அன்பு மாமாவின்
அன்பு முத்தங்களும், வாழ்த்துக்களும்
wish your happy
உலகம் முழுமையும்
கலக்கம், ஒருவித தயக்கம்
என்ன செய்வோம் இப்பாரினில் /
இயன்றவரை போராட்டம்
வாழ்வில் பிடிப்பு
என்ற வார்த்தை எங்கே/
தொலைத்து விட்டு தேடுகிறோமா/
இல்லை, இல்லை
தொடரும் பாதையில் சோதனைகள்
வெல்ல முடியாமல் திணறல்
ஏன் இந்த மயக்கம் கலக்கம் /
உறவு என்ற அத்தியாயம்
ஏக்கத்தில் மட்டுமே ,
நாடு விட்டு நாடு காண்பதெப்போது/
ஆனாலும் நம்பிக்கை மட்டும்
நலமாக நம்மை தேற்றுகிறது.
அதிகரிக்கும் அக்கிரமங்கள்
கண்கள் முன்னே...
நாளும் பொழுதும் நலமாக விடிகிறது
அதை மகிழ்வுடன் வரவேற்கும் அமைதி
தொலைவில் தெரிகின்றதே,
மனிதனின் அழகிய வாழ்வில்
எவர் கண்கள் உறுதியதோ/
அன்புள்ள தந்தையருக்கு
வாழ்வதிலும் மிகப் பெரிது தியாகம் ,
தன்னலம் பேணாது ஓடியோடி உழைத்து
உண்ணும் நேரமும் உறங்கும் நேரமும்
மட்டுமே தனதாக்கி
மிஞ்சுகின்ற பொழுதெல்லாம்
தன் பிள்ளைக்கு பிள்ளைக்கு என்று
பணத்தையும் பாசத்தையும் உழைப்பையும்
கொட்டிக் கொடுத்து வளர்க்கும்
அன்பும் அக்கறையும் உள்ள தந்தையரே
உங்களுக்காக இந்நாளை
மிக சிறந்த நாளாக தெரிந்து
தந்தையின் மடியில், அவன் கரத்தில் பிள்ளைகள்
என்கின்ற விழிப்புணர்வு கொள்ள
தந்தையர் தினமாக உலகத்தில் சிறந்த
உள்ளமெல்லாம் தொட்டு விட்ட
இத்தினம் மிக மிக உயரிய தினம் .
என்றென்றும் போற்றுகிறோம் வாழ்த்துகிறோம்
தந்தை இன்றிய
நீயே ஒரு கவிதை
இக் கவிதைக்கோர் கருத்து
தேடுகிறேன் கிடைக்கவில்லை
மனமார வாழ்த்துகிறேன்
உன் வாழ்வில் வளமனைத்தும்
பெற்று, பெற்றிட, பெற்றிட, போற்றிட
புகழ் ,செல்வம், சுகம் சேர்ந்து
வாழ்வெல்லாம் நிறைந்து
நீயும் உன் குடும்பமும்
நீடூழி வாழ்கவென்று
நெஞ்சமெல்லாம் நிறைந்து
மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகிறோம்
அம்மா அப்பா அண்ணா அக்கா சஜி,
loveing mathan , childs kirupal , sinmaiyi
god bless you
wish your happy birthday tishanthimma
நண்பர்கள் (15)

வீ முத்துப்பாண்டி
மதுரை

பிரியாராம்
கிருட்டினகிரி

ஜின்னா
கடலூர் - பெங்களூர்

இரா-சந்தோஷ் குமார்
திருப்பூர் / சென்னை
