நாம் நாமாக
நானிலமும் போற்றும்
நாம் என்ற சொல்லில் நல்லவர்கள்
நண்பர்கள் அன்பர்கள்
நலமுடனே கூடி வாழும் போது
நாலும் தெரிந்து நலமுடன் பழகும்
நற்பண்பும் நன்மைகளும் நம்மிடமே
நாம் என்ற சொல்லில் தனிமை இல்லை
நன்மையெனும் பெரும் பயனும் உண்டு
நன்றியுடன் நம்முடன் நமக்காக
நாலும் தெரிந்த நல்மனங்கள் உண்டு
நாம் என்றால் உரிமையுள்ள உணர்வுகளால்
நெகிழ்ந்திருக்கும் நேரமுண்டு
நாமென்றால் தனிமையில்லை
நாற்புறமும் நமக்கென்றே நாம்
நலம் கண்டு நாம் வாழ்வோம்
நல்ல பல நற்பண்பும் நற்குணமும்
நாமாக இணைந்திருக்க
நலிவில்லை நம் வாழ்வில் ஒருபோதும் ..