நான் பேனா பேசுகிறேன்
நான் உங்கள் எண்ணங்களுக்கு எழுத்து வடிவம் கொடுப்பவன்
அதனால்தான் உங்கள் இதயத்தில் என்னை வைத்திருக்கிறீர்கள்
நான் தலை குனிந்து உங்களை தலை நிமிர வைக்கிறேன்
நான் கண்ணீர் சிந்தி உங்களை கவிதை எழுத வைக்கிறேன்
என் வியர்வைத் துளிகளைத் தான் நீங்கள் காவியம் என்கிறீர்கள்
நீங்கள் என் கழுத்தைப் பிடிக்கும் போதெல்லாம் நான் எழுத்தை வடிக்கிறேன்
என்னுள் நீல மை இருக்கும் பொழுது
சாதாரணமாகத்தான் இருக்கிறது உங்களின் நிலைமை
அது பச்சையாகும்போது உங்கள் வாழ்க்கையும் பச்சையாகிறது
நான் வெறும் எழுதுகோல் அல்ல
உங்கள் வாழ்க்கையை வளப்படுத்த எழுந்த கோல்
நான் எழுத்தாணி மட்டுமல்ல உங்கள் கல்வியை மேம்படுத்தும் அச்சாணி
நான் திருவள்ளுவரின் கைகளை கரம் பிடித்த போது பிறந்த குழந்தை தான் திருக்குறள்
ஆனால் சில கயவர்கள் என்னை கரம் பிடிப்பதால்
உடைந்து போய் நிற்கிறது என் குரல்
நான் உங்களின் ஆறாம் விரல்
வெள்ளைத்தாளோடு இணைந்து பிறக்கும் என் குழந்தைகள் ஒவ்வொன்றும் மாணிக்கப் பரல்
நான் ஒரு அழகிய ஆயுதம்
என்னை பிறரை வாழ்த்த பயன்படுத்துங்கள் தயவு செய்து வீழ்த்தப் பயன்படுத்தாதீர்கள்
கவிஞர் புதுவைக் குமார்ன் உங்கள் எண்ணங்களுக்கு எழுத்து வடிவம் கொடுப்பவன்
அதனால்தான் உங்கள் இதயத்தில் என்னை வைத்திருக்கிறீர்கள்
நான் தலை குனிந்து உங்களை தலை நிமிர வைக்கிறேன்
நான் கண்ணீர் சிந்தி உங்களை கவிதை எழுத வைக்கிறேன்
என் வியர்வைத் துளிகளைத் தான் நீங்கள் காவியம் என்கிறீர்கள்
நீங்கள் என் கழுத்தைப் பிடிக்கும் போதெல்லாம் நான் எழுத்தை வடிக்கிறேன்
என்னுள் நீல மை இருக்கும் பொழுது
சாதாரணமாகத்தான் இருக்கிறது உங்களின் நிலைமை
அது பச்சையாகும்போது உங்கள் வாழ்க்கையும் பச்சையாகிறது
நான் வெறும் எழுதுகோல் அல்ல
உங்கள் வாழ்க்கையை வளப்படுத்த எழுந்த கோல்
நான் எழுத்தாணி மட்டுமல்ல உங்கள் கல்வியை மேம்படுத்தும் அச்சாணி
நான் திருவள்ளுவரின் கைகளை கரம் பிடித்த போது பிறந்த குழந்தை தான் திருக்குறள்
ஆனால் சில கயவர்கள் என்னை கரம் பிடிப்பதால்
உடைந்து போய் நிற்கிறது என் குரல்
நான் உங்களின் ஆறாம் விரல்
வெள்ளைத்தாளோடு இணைந்து பிறக்கும் என் குழந்தைகள் ஒவ்வொன்றும் மாணிக்கப் பரல்
நான் ஒரு அழகிய ஆயுதம்
என்னை பிறரை வாழ்த்த பயன்படுத்துங்கள் தயவு செய்து வீழ்த்தப் பயன்படுத்தாதீர்.