புத்தாண்டு பிறந்தது

புத்தாண்டு பிறந்தது

அதிகாலை கதிரவன் ஒளியோடு புத்தாண்டு பிறந்தது
ஆதவன் ஒளிகதிர்களினால் நாடு நலம் பெற
இனிமையும் நன்மையும் பொங்கி பெருகிட
ஈடேதும் எதிர்பார்க்காமல் நண்பர்கள் கூடிட
உல்லாசமாக நாளெல்லாம் கொண்டாடிட
ஊரார் உள்ளங்களில் சிறுமைகள் ஒழிந்திட
எல்லா இடங்களிலும் செழுமை ஓங்கிட
ஏற்றம் நிறைந்து சிறப்புக்கள் வளர்ந்திட
ஐயங்களும் சீர்குலைவுகளும் மறைந்திட
ஒற்றுமையுடன் வரும் ஆண்டை வரவேற்று
ஓசையுடன் புத்தாண்டும் பிறந்தது
புதுப்பொலிவும் வந்ததென ஆடிப் பாடி
மகிழ்ச்சியோடு அதை வரவேற்போம்...

எழுதியவர் : கே என் ராம் (31-Dec-25, 3:11 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 70

மேலே