வைகுண்ட ஏகாதசி

பரமனின் பதம் காண
பரமபத வாசல் நாடி,
வரிசையில் நின்று
வாயில் கண்டதும் கைகள் வாரி எடுத்து திருமாலை வணங்கி…
ஆலயம் சுற்றி வணங்கி,
அந்தராளப் பகுதியில் நின்று,
அச்சுதனின் அழகை ரசித்து,
அங்கம் சிலிர்த்து
ஆத்மார்த்தமாய் கைகூப்பி,
ஒரு கணம் நின்று நோக்கி…
திருமாலின் மேனி பட்ட
துளசி தீர்த்தம் பெற்று,
திரும்பி பெருமாளை
தரிசித்து தீர்த்தேன்…

நான் எனும் சொல்லே
நாதனின் பாதத்தில்
நொறுங்கிப் போய்
வைகுண்ட வாசல்
உள்ளம் திறந்த நிலை
என்று உணர்ந்தேன்…
வைகுண்ட ஏகாதசி
ஒரு பிறவி விழிப்பு
பரமபத வாசல் வழியே
பரமன் அடி புகும்
நிகழ்வு…

எழுதியவர் : சந்தோஷ் (30-Dec-25, 10:16 pm)
சேர்த்தது : சந்தோஷ்
பார்வை : 15

மேலே