சந்தோஷ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சந்தோஷ்
இடம்:  தருமபுரி
பிறந்த தேதி :  17-Dec-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jan-2018
பார்த்தவர்கள்:  392
புள்ளி:  56

என் படைப்புகள்
சந்தோஷ் செய்திகள்
சந்தோஷ் - சந்தோஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Feb-2019 9:00 pm

நூறாண்டு கோவில்
இடிக்கிறார்கள் புதுப்பிக்க
தெருவுக்கு ஒரு கோவில்
நாம் செல்வதெங்கே...
பூசலார் பெருமையெலாம்
பாட்டுடன் மறந்துவிட்டு
பாமரனை படுத்தும்
நவீன கால கோவில்கள்...
பல ஆயிரம் வாங்கி
கோவில் கட்டி தங்களை பெருமைப்படுத்த நினைத்து நம்மை பாடாய் படுத்தும் இவர்கள்...
கடவுள் நேரே வந்தால் ஒற்றை கேள்வி கேட்பார் நானா கேட்டேன் என்று...
உள்ளமே பெருங்கோவில் ஊன் உடம்பே ஆலயம் என்று
திருமூலர் சொல்வதே நினைவு வருகிறது ..
என்னை பொறுத்தவரை
அன்பும் கருணையும் கொண்டவரின்
உடலே கோவில் அவர் ஆன்மாவே
கடவுள்... அவ்வளவே....

மேலும்

சந்தோஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2021 8:49 pm

அளவறிந்து நீர் வார்க்கும்
தண்ணீர் குழாய்
ஆயிரம் கேள்விகளுக்கு
மத்தியில்
ஆர்பரித்து மாட்டிய
ஆண்டெனா
மிதியடி இடத்துக்கும்
மீதமில்லாமல் பிரச்சனை..

காற்றினில் பறக்கும்
தேங்காய் நாறு
சோப்பு நீர் மிதக்கும்
மொட்டை மாடி
வேகமாக மூடப்பட்ட கதவு
வீணாக வரும் சண்டை..

இப்படி இருந்தால்
இதுவும் தப்பு
அப்படி இருந்தால்
அதுவும் தப்பு
திரும்பி பார்ப்பதற்கே
குறைக்கும் நாய்போல்
தொட்டதுக்கெல்லாம்
தத்துவங்கள்...

வந்து வீழ்ந்த தத்துவங்களில்
வெகுண்டெழுந்து வீதிபோய்
நூறு வீடுகள்
எரியிறங்கி பார்த்தபின்
கடற்கரை மணலில்
மோதி நிற்கும்
கப்பல் போலவே
எத்தனையோ
நினைவுகளை
புதைத்து நிற்கும்
வாட

மேலும்

சந்தோஷ் - சந்தோஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jan-2018 6:47 am

தத்தளித்து கொண்டிருக்கிறோம்
கண்ணீர் கடலில்
தண்ணீருக்கு வழியின்றி...

முப்போகம் விளைந்தது போக
எஞ்சி இருபது
எலிக்கறி மட்டும் தான்...

ஆற்றின் கரைதெறியா
நேரம் போய்
மைதானம் ஆகிவிட்ட
ஆற்றினில்...

கனல் கக்கும்
தமிழ் துறந்து
வேற்றுமொழி பயிலும்
தருணம் இது...

செந்தமிழ் தொட்ட
பாடல்கள்
இன்று கொலைவெறி
கொண்ட கோலத்தில்...

தமிழ் இன்று
ஆட்டுக்கிடைகளாய்
ரோட்டுகடைகளில்...

நம் பழமைகளில்
எஞ்சியிருப்பது
தமிழ் மட்டும் தான்

தமிழை தாழ்த்தி
பேசாதீர்கள்...

தமிழை ஏசுவோர்
கைக்கு விலங்கிடுவோம்...

அவர் நாவை
தீக்குசிச்கு தின்ன
கொடுப்போம்...

தமிழ்

மேலும்

உண்மைதான் நட்பே....... ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...... 28-Jan-2018 5:57 pm
ஒற்றுமையின் அளவை விட இன்று எம்மிடையில் வேற்றுமைகளின் அளவு பெருகி இருப்பதே எல்லாவற்றுக்கும் காரணம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Jan-2018 12:22 pm
சந்தோஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Feb-2019 9:00 pm

நூறாண்டு கோவில்
இடிக்கிறார்கள் புதுப்பிக்க
தெருவுக்கு ஒரு கோவில்
நாம் செல்வதெங்கே...
பூசலார் பெருமையெலாம்
பாட்டுடன் மறந்துவிட்டு
பாமரனை படுத்தும்
நவீன கால கோவில்கள்...
பல ஆயிரம் வாங்கி
கோவில் கட்டி தங்களை பெருமைப்படுத்த நினைத்து நம்மை பாடாய் படுத்தும் இவர்கள்...
கடவுள் நேரே வந்தால் ஒற்றை கேள்வி கேட்பார் நானா கேட்டேன் என்று...
உள்ளமே பெருங்கோவில் ஊன் உடம்பே ஆலயம் என்று
திருமூலர் சொல்வதே நினைவு வருகிறது ..
என்னை பொறுத்தவரை
அன்பும் கருணையும் கொண்டவரின்
உடலே கோவில் அவர் ஆன்மாவே
கடவுள்... அவ்வளவே....

மேலும்

சந்தோஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Feb-2019 8:58 pm

உருவங்கள் உரைப்பதில்லை
உடுத்தும் உடையும்
உணர்த்துவது இல்லை...
மதம் கொண்ட யானை
தன் தலை மீது மண்ணல்லி
மயக்கம் போக்கும்...
மதம் கொண்ட நாம்
இங்கு கடவுளின் பெயரில்
போகும் போக்கில் வீசி விட்டு
செல்கிறோம் மண் மூட்டைகளை...
வாய்பேச்சுகள் எல்லாம் உண்மையில்லை
தன் இருப்பை காட்ட கத்திவிட்டு
கல்லெடுத்து எரிகையில் சிதறி
காணாமல் போகும் ஞமலி கூட்டம்...
உனக்காக வாழ்
உனக்காக பேசு
உனக்காக சிரி
உள்ளுக்குள் இருக்கும்
சுளையின் இனிமை விடுத்து
சுள்ளென்று குத்தும்
பலாப்பழ முட்களாய் வாழாதீர்...

மேலும்

சந்தோஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2018 4:47 pm

சுத்த இரத்தம்
எடுத்து செல்லும்
சிரைகள் போலவே
சிலர் இப்புவி மேல்
அங்கும் இங்கும்
ஆதலால் தான் உலகம்
உயிர் வளி பெறுகிறது...

மேலும்

சந்தோஷ் - சந்தோஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Aug-2018 8:18 pm

தேயாத வெண்ணிலா...

சிறு நுதல் கொண்ட என்
சிருங்கார பெண்ணே....

உன் உதட்டுச் சுழிப்பினில்
சுழலாமல் நிற்கிறது என்
உலகம்...

உன் ஓரப்பார்வையில்
உதிரம் உறைந்து விடும்போல...

உன் சிறிய விரல்களில்
சுருக்கென்று கிள்ளிய இடம்
என்ன தவம் சேய்ததோ...

பூமியை மிதிக்காமல் மிதக்குதடி
உன் பூப்பாதம்...

காற்றின் மேனி உன் கைகள்
அறியுமோ உன் கைவிரல் தீண்டும் இடமெல்லாம் தென்றல் தவள்கிறது...

வெண்ணிலவு தோர்க்குமடி வெண்ணிலவே உன் அழகினில்...

சொல்லிமாளவில்லை உன் அழகை
சாகா வரம் கேட்பேனோ உன்னை
சலிக்காமல் பார்த்திட...

மேலும்

சந்தோஷ் - சந்தோஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jan-2018 8:43 am

இருள் வடியும் இரவு
தனிமையில் நான்
விண்மீன்கள் வெளிச்சத்தில்
உனை காண வந்தேன்...
காரிருளில் கரையாத
வெண்ணிலவின் குளிரொளியில்
உனை காண வந்தேன்....
ஊர் உறங்கும் நேரம்
யாரும் இல்லை இரவு
ஆனாதையான தெருவோரம்
நான் மட்டும் தனிமையில்....
உன் வீட்டு ஜன்னலை
கொஞ்சம் திறந்து பார்..
உன் அழகை பார்த்து
வெண்ணிலா பொறாமையால்
முகம் மூட முகில் தேடும்...
என் இரவும் மோட்சம் பெரும்...

மேலும்

நல்ல வருணனை வாழ்த்துக்கள் 04-Feb-2018 5:53 am
அருமை அருமை... 29-Jan-2018 9:57 pm
இரவுகளின் பாதையில் சிதறும் நிலாத்துண்டுகள் போல் என்னவள் முகம் என்னை ஆள்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Jan-2018 7:47 pm
சந்தோஷ் - சந்தோஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jan-2018 12:26 pm

குளிரில் நடுங்கும் இரவு
ஒற்றை போர்வை
நீயும் நானும்.

உன் அருகில் என் இரவுகள்
சுகமான அனுபவம்..

உன் காதில் நான் சொன்ன
கவிதைக்கு நீ ஒன்றும்
சொல்லாமல் அமைதியாக நீ... தூக்க கலக்கத்தில் நான்...

நள்ளிரவில் நான் கொடுத்த முத்தம்
உன்னை சிலிர்க்க வைத்ததா.

உன் பஞ்சு உடலில் நான்
நான் சாய்ந்த போது உனக்கு வலித்ததா.

உன் அருகில் என் இரவுகள்
சுவர்க்கம் தான்..

என் இரவுகள் முழுக்க துயில்
கலைக்காத தலையனையே என் ஆத்மார்த்தமான நன்றிகள்

மேலும்

நன்றி நண்பரே 27-Jan-2018 12:51 pm
உணர்வுகள் சிந்தும் காதல் மழை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Jan-2018 12:34 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

வாசு

வாசு

தமிழ்நாடு
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (17)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (9)

மேலே