தேயாத வெண்ணிலா

தேயாத வெண்ணிலா...

சிறு நுதல் கொண்ட என்
சிருங்கார பெண்ணே....

உன் உதட்டுச் சுழிப்பினில்
சுழலாமல் நிற்கிறது என்
உலகம்...

உன் ஓரப்பார்வையில்
உதிரம் உறைந்து விடும்போல...

உன் சிறிய விரல்களில்
சுருக்கென்று கிள்ளிய இடம்
என்ன தவம் சேய்ததோ...

பூமியை மிதிக்காமல் மிதக்குதடி
உன் பூப்பாதம்...

காற்றின் மேனி உன் கைகள்
அறியுமோ உன் கைவிரல் தீண்டும் இடமெல்லாம் தென்றல் தவள்கிறது...

வெண்ணிலவு தோர்க்குமடி வெண்ணிலவே உன் அழகினில்...

சொல்லிமாளவில்லை உன் அழகை
சாகா வரம் கேட்பேனோ உன்னை
சலிக்காமல் பார்த்திட...

எழுதியவர் : சந்தோஷ் (21-Aug-18, 8:18 pm)
சேர்த்தது : சந்தோஷ்
Tanglish : theyaatha vennila
பார்வை : 527

மேலே