புத்தகம்

*********
வாங்குமொரு புத்தகத்தால் வாழ்வை மெருகேற்றி
தீங்கற்று வாழ்க தெளிந்து
*
தெளிவின்மை நோய்க்குத் தெரிந்த மருந்து
ஒளியூட்டும் புத்தக மொன்று
*
ஒன்று மறியார் உலகை யறிவதற்
கென்றுரு வானதே நூல்
*
நூலிடைப் பின்சென்று நும்பரம் கொள்வதிலும்
நூலகம் செல்வ துயர்வு
*
உயர்வதற் கான உதவிக் கரமாம்
வியத்தகு புத்தக வித்து
*
வித்து மரமாகும் வித்தை யறிந்திடப்
புத்தகப் படிப்பையும் போற்று
*
போற்றும் அறிவூறப் புத்தகம் கற்போர்க்குக்
காற்றும் தலைவணங்கக் காண்
*
காண்கின்ற புத்தகக் கண்காட்சி யாவிலும்
வேண்டுவனப் பெற்றுப் படி
*
புத்தகம் வாசித்துப் புத்திசீவி யானார்தம்
சித்தத் தமைதி சிறப்பு
*
சிறப்பான புத்தகமே சீவியவழி காட்டி
அறமுடன் வாழ்ந்துய்ய வாங்கு
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (6-Jun-25, 10:16 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 57

மேலே