கடவுளின் சாபம்

#கடவுளின் சாபம்..!

பெண்களின் பெயரில் போலிக் கணக்குகள் வைத்திருக்கும் ஆண்கள் எல்லோரும்
"பெண்களாய் மாறக்கடவது"
என்று ஓர் நாளில்
சாபமிட்டிருந்தார் கடவுள்..!

சாபம் பலித்து விட
மீண்டும் அவர்கள்
ஆண்கள் பெயரில்
போலிக் கணக்கினைத்
துவங்க ஆரம்பித்திருந்தார்கள்..!

கோபம் தாளாத கடவுள்
மூன்றாம் கண்ணைத்
திறந்திருந்தார்...

கடவுளுக்கே
மண்ணைத் தூவியிருந்தனர்
போலிகள்...
அவரின் பார்வைக்குச் சிக்காமல்..!

ருத்ர தாண்டவமாடி
மீண்டும் சாபமிட்டார் கடவுள்
"போலிகள் திருநங்கைகளாக
மாறக் கடவது_" என்று

நாட்டில் திருநங்கைகள்
பெருத்துவிட்டனர்...!

நிறைய பேர் முகநூல் பக்கம்
வருவதையே
நிறுத்திக் கொண்டு விட்டார்கள். !

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (31-Jul-25, 9:20 pm)
சேர்த்தது : C. SHANTHI
Tanglish : kadavulin saabam
பார்வை : 52

மேலே