பல்லுயிர் ஓம்புதல்

பல்லுயிர் ஓம்புதல்

மொழி என்கிறார்கள்..
ஒலி என்பதை, தவிர வேறொன்றும் கேளேன்
சாதி என்கிறார்கள்..
சரீர வேற்றுமை என்பதை, தவிர வேறொன்றும் கானேன்
இனம் என்கிறார்கள்..
இவ்விடதோர் என்பதை, தவிர வேறொன்றும் அறியேன்
மதம் என்கிறார்கள்..
மனித ஒழுக்கம் என்பதை, தவிர வேறொன்றும் புரியேன்
நாடு என்கிறார்கள்..
நடுவே கோடு என்பதை, தவிர வேறொன்றும் விளங்கேன்
மனிதன் என்கிறார்கள்..
மற்றுமொரு உயிரினம் என்பதை, தவிர வேறொன்றும் உணரேன்
ஆறாம் அறிவு என்கிறார்கள்..
ஆணவத்தின் செறிவு என்பதை, தவிர வேறொன்றும் கூறேன்
அன்பு என்கிறார்கள்..
அதுமட்டும் தான் அகிலத்தை இணைக்கும் என நம்புறேன்

எழுதியவர் : Hemandhakumar (27-Jul-25, 12:17 pm)
சேர்த்தது : ஹேமந்தகுமார்
பார்வை : 5

மேலே