எனக்கு பிடித்தமான சினிமா என்றால்

முதலில் ஒரு உறுதியான கதை இருக்க வேண்டும்.
இறுதியில் மொரல் இருக்க வேண்டும்.
இதனைத் தாண்டி, பார்வையாளர்களை சிந்திக்க வைக்க, பார்வையை சற்றும் சோர்வில்லாமல் கொண்டு செல்ல non-linear திரைக்கதைப் போக்கில் படம் நகர வேண்டும்.

இல்லையெனில், எதார்த்தமாக, நேர்த்தியான linear திரைக்கதையாக இருந்தாலும், மறைக்கப்பட்ட, வெற்றியடைந்த மற்றும் தோல்வியடைந்த அல்லது பாதிக்கப்பட்ட நபரின் வலியை, குறைந்த அளவு பிக்ஷன் கலந்திருந்தாலும், லாஜிக் மீறல் இன்றி கொண்டு சென்று, மனதிற்குள் நங்கூரம் போல் தாக்கத்தை உண்டுப்பண்ண வேண்டும்.

அந்த தாக்கம் நமக்கு மோட்டிவ் தரலாம் அல்லது இரக்கத்தையும் உண்டுப்பண்ணலாம்.

🖤 சினிமா என்பது சிந்திக்க தூண்டும் மற்றும் நம்மை மாற்றும் கலை.

- கௌசல்யா சேகர்

எழுதியவர் : கௌசல்யா சேகர் (6-Jun-25, 11:29 am)
சேர்த்தது : கௌசல்யா சேகர்
பார்வை : 49

மேலே