Gopinath J - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Gopinath J
இடம்:  Chennai, Tamil Nadu, India
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Apr-2020
பார்த்தவர்கள்:  184
புள்ளி:  59

என்னைப் பற்றி...

சிங்காரச் சென்னையில் பிறந்து வளர்ந்து, பள்ளிப் படிப்பை முடித்த 18 வயதில் தட்டச்சராக முதல் பணியில் சேர்ந்தேன். அன்று துவங்கிய என் தொழில்வாழ்க்கை, அலுவலக உதவியாளர், அந்தரங்க காரியதரிசி, டெக்னிக்கல் கிளர்க், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், எடிட்டோரியல் அசிஸ்டெண்ட், எடிட்டர், காப்பிரைட்டர், புரப்ரைட்டர் என பல்வேறு பாதைகளில் இலக்கின்றி பயணித்து இன்றளவும் தொடர்கிறது.

சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிகவியல் பட்டதாரியான பிறகே, மொழியின் மீதும் எழுத்தின் மீதும் எனக்குள்ள ஆர்வத்தை நான் உணர நேரிட்டது. இந்த 35+ ஆண்டு கால தொழில்வாழ்க்கையில் உயிர் வளர்த்ததையும், உடல் வளர்த்ததையும் தவிர, உருப்படியாக இந்தச் சமூகத்திற்கு செய்தேன் என்று மார்த்தட்டிக் கொள்ள எதுவுமில்லை.

அதே சமயம், படைப்புலகில் நான் பெற்ற சில சில்லரை சந்தோசங்களை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். “கயிற்றுக் கட்டில்” என்ற முதல் சிறுகதை தினத்தந்தியில் ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன்பு பிரசுரமானது. க்ருஹஷோபா பெண்கள் மாதாந்திரியில் 6 ஆண்டு காலம் எடிட்டோரியல் பணியாற்றிய பொழுது, அதில் சுமார் 15 சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும், தினமலர்-வாரமலர், தினத்தந்தி-குடும்பமலர், ஆறாம்திணை ஆகியவற்றில் சுமார் 75 புதுக்கவிதைகளும் வெளியாகி உள்ளன.

2012ம் ஆண்டில் ஜெம் டிரான்ஸ்லேட்டர்ஸ் என்ற மொழிபெயர்ப்பு நிறுவனம் தொடங்கி இன்றளவும் எனது பணியை செவ்வன செய்துவருகிறேன். படைப்பிலக்கியத்தில் கவனம் செலுத்தி எழுத்து ஆளுமைகளில் ஒன்றாக அறியப்பட வேண்டும் என்பதே இப்போதைய அவா. என்னை தொடர்புகொள்ள பார்வையிடவும்: www.gemtranslators.com

என் படைப்புகள்
Gopinath J செய்திகள்
Gopinath J - Gopinath J அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Oct-2024 9:22 pm

பழையன தொலைத்து
புதியன புகுத்தி
பழைய வண்ணையில்
புதிய வெண்ணெயாகயிருக்கிறது
இராமானுஜக் கூடம் தெரு.

கணக்கியலுடன் துணைப்பாடமாக
காதலை அறிமுகப்படுத்திய
ஆர்.ஜே.ஆர் பள்ளி
இருந்தவிடத்தில் இன்றோர்
அடுக்குமாடிக் குடியிருப்பு!

சற்று தள்ளி
உலக அதிசயமாய்
புருவங்கள் உயர்த்துகிறது
தன்னிலை தொலைக்காத
தாமரை இல்லம்!

எண்பதுகளின் இறுதியில்
கூந்தல் துவட்ட...
துணி காயவைக்க...
மேல்மாடத்தில் உலவிடும்
அந்த வெண்புறா...

அறிந்திருக்க வாய்ப்பில்லை;
அவ் வீதியில்
கால் முளைத்ததோர்
காதல் பெண்டுலம்
காலணியாய் தேய்கிறதென்பது.

தற்போது அப்புறா
பரத கண்டத்திலோ
இதுவரை நான்
பாராத கண்ட

மேலும்

வாசித்தமைக்கும், வரிகளை நேசித்தமைக்கும் நன்றி. 28-Dec-2024 12:19 pm
பழைய நினைவுகளை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் கனமழை காலங்களில் அரும்பு நினைவுகளை அடைக்காக்கலாம் - தன் சிறகுகளின் குடைக்குள்! -----அருமை 22-Oct-2024 4:18 pm
Gopinath J - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2024 12:10 pm

நெடுநாள் கனவொன்று
நிறைவேறும் வழி வேண்ட,
“பெரியபாளையத்தம்மனுக்கு
கோழி சுற்றி விடு”
பரிகாரம் சொன்னார்
ஜோசியர் மாமா!

சுற்றிவிடப்படும் கோழிகள்
மறுசுழற்சிக்கானவை என்பது
ஊரறிந்த ரகசியமெனினும்
பொருட்படுத்துவதில்லை
பவானி அம்மா!

பாரிய நேர்த்திக்கடன்களோடு
பங்களாவைச் சுமத்தியதன்
கழுத்தொடிப்பது பாவமென
பஞ்சாரத்தில் பதுக்கியதென்
பிரியாணிக் கனவு!

மேலும்

Gopinath J - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Dec-2024 8:45 am

விடைக்கொடுக்கவோ
விடைப்பெறவோ நேரும் தருணங்களே
வாழ்க்கையின் மிகையில்லா
உச்சபட்ச வேதனை!

நியாயமின்றி ஓர் உறவு
நம்மை கைவிட்டிருப்பது தான்
விடைபெறுதலில் விளையும்
ஆகப்பெரும் உயிர் வலி.

என்னிடம் எதிர்பார்த்த
ஏதோவொன்று நம்பிக்கையிழந்த நிலைக்கு
உங்களைத் தள்ளியிருக்கலாம்

அபரிமிதமான உங்கள் தன்னலம்
அப்பழுக்கற்ற என் நேசத்தை
அழுக்கானதாக காட்டியிருக்கலாம்.

விரியுமென் தொழில்
உங்கள் விழிகளுக்கு
பொறா…மையைத் தீட்டியிருக்கலாம்.

வெட்டி விவாதம் கூட
உங்கள் கையளவு ஈகோவை
கடலளவு உசுப்பேற்றியிருக்கலாம்.

விரும்பத்தகாத ஒரு பழக்கம்
உங்கள் சகிப்புத்தன்மையின் தலைச்சொறிந்து
சங்கடம

மேலும்

Gopinath J - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Dec-2024 1:42 pm

காதல் ஏன் அவ்வளவு நல்லதில்லை
என்பதற்கு
காரணங்கள் மூன்று!

முதலாவது:
உருப்படுவோமா என்பதை விடுத்து
அவள் பார்வையில் புலப்படுவோமா
என்பதையே வேட்கையாக்குகிறது.

இரண்டாவது:
லட்சணங்களால் கவரப்படுவதையும் - பின்
லட்சங்களால் களையப்படுவதையுமே
லட்சணமாகக் கொண்டிருக்கிறது.

மூன்றாவது:
காலாவதியாகி கால் நூற்றாண்டானாலும்
கசிந்துருகும் கவிஞர்களை
கண்டமேனிக்கு களமிறக்கிவிடுகிறது.

மேலும்

Gopinath J - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2024 9:05 pm

ஆதியிலே அரைக்கப்பட்டு
ஆவியிலே அவிக்கப்பட்டு
அவதரித்ததுமே…
முள்கரண்டியால் பிய்க்கப்பட்டு
மூவர்ணங்களில் முக்கியெடுக்கப்பட்டு
முப்பத்தியிரண்டால் சிதைக்கப்பட்டு
பிறவிப்பயனை அடைகிறேன்
வயிற்றுக்கு வாழ்க்கைப்பட்டு.
அலுத்துக் கொள்ளும் மனிதர்களே
ஆனந்தம் கொள்ளுங்கள்
என்னிலும் அதிகமாக
இம்சைப்படவில்லையென!

மேலும்

Gopinath J - Kannan selvaraj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Apr-2024 2:48 pm

சிந்தையிலே பூ பூத்து
சிற்றின்ப தேன் கசிந்து
வஞ்சி மகள் வழியோரம்
வாய் சிரித்து நின்றிருந்தாள்

போகும் வழி தெரிந்திருந்தும்
போய் முடிக்கும் பணி இருந்தும்
பொன் மகளைப் பார்த்த கணம்
நகர கால்கள் மறுக்கிறதே

வண்டு மொய்க்கும் பூ கண்கள்
வா வா என்றழைக்கிறதே
வாழ்ந்துப் பார்க்க வேண்டுமென்று
வாஞ்சை மனம் துடிக்கிறதே

சாஸ்திரங்கள் படித்திருந்தும்
சத்தியம் பல புரிந்திருந்தும்
இந்த நொடி போதும் என்று
இருட்டில் கால்கள் நுழைகிறதே

நான்கு பக்க சுவர் அடைத்து
நடு நரம்பும் முறுக்கெடுத்து
அருகிலிருக்கும் பெண்ணைதொட்டு
அணைக்க நெஞ்சம் மறுக்கிறதே

கடைத்தெருவே சென்றபோதும்
கடற்கரையில் இருந்த போதும

மேலும்

எனது கவிதைகளும் தங்களின் ரசிப்பிற்கு உகந்ததாய் உள்ளது அறிந்து மனம் மகிழ்கிறது. நன்றி. 07-May-2024 6:34 pm
நன்றி திரு.கோபிநாத் அவர்களே. மிக்க நன்றி. தங்களின் கருத்துக்கும் பாரட்டியதற்கும் மிக்க நன்றி. தங்களின் கவிதைகளை பார்த்தேன். மிகவும் அழகாக உள்ளது. 20-Apr-2024 12:32 pm
ஒரு குறும்படத்திற்கான மிக நுணுக்கமான உணர்வுகள் கூடிய ஒரு காட்சிப்படுத்தலை, தேர்ந்தெடுத்த சொற்களால் அருமையான கவிதையாய் கண்முன் கொண்ர்ந்திருக்கிறீர்கள். பல்வேறு மனப்போராட்டங்களுக்குப் பிறகு இறுதியாக சபலத்திற்கு அடிப்பணியாமல் முடித்த விதம் சிறப்பு. 20-Apr-2024 11:39 am
Gopinath J - Gopinath J அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2024 11:43 am

நான் பெற்றவனுடன்
நடந்துகொண்டிருந்தேன்
ஒரு ஞாயிறு காலை.

வளர்ப்பு நாயுடன்
வாயாட முடியாமல்
முதியவர் ஒருவர்
மூச்சிரைக்க முந்தினார். .

”பயிற்றுவித்திருந்தால்
இப்படி படுத்தாதல்லவா?”

”நான் தவறிவிட்டேன்
நீங்கள் தொடங்கிவிட்டீர்களா?”

புரியாமல் விழித்தவனை
பூடகமாய் பார்த்தார்;

கைவிடுத்துச் சென்ற
என் பிள்ளைக்கும் எனக்குமான
கணிசமான இடைவெளியை...

சூடாக இல்லாமல்
கூலாக சுட்டியவர் முகத்தில்
புத்தரின் புன்னகை!

மேலும்

வித்தியாசமான உவமை முரண் சொற்றொடர் பழைய கவிதைகளிலிருந்து சற்று வித்தியாசப் படுவது புதுக் கவிதைக்கு வித்தியாசமான அடையாளம் தரும் ஸ்பரிசன் இவ்வாறு எழுதுவார் 22-Mar-2024 4:51 pm
’வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல’ என்பது கேட்டுப் புளித்துப் போன ஒன்று என்பதால் சற்று வித்தியாசமாக கவிதையின் இறுதி வரிகளிலிருந்தே தலைப்பினை உருவாக்கினேன். பாராட்டியமைக்கு நன்றி. 22-Mar-2024 10:52 am
நன்றி கவின். 22-Mar-2024 10:49 am
தலைப்பு இன்னும் அருமை 21-Mar-2024 7:14 am
Gopinath J - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Nov-2022 1:44 am

தேவதை
**********
புன்னகை ஓவியம் பூவிதழ் தீட்டிடப்
பொன்னென வேயவள் மின்னுகின்றாள் - ஒரு
கன்னலின் காவியம் கண்வழி யாளிளங்
கண்மணி யானவள் தீட்டுகிறாள் - தன்
மன்னவன் மேலொரு மாமழை யாய்விழ
மன்மதக் கார்முகி லாகுகிறாள் - நடை
அன்னமுந் தோற்றிடும் ஆரணங் கானவள்
அன்பெனும் நாட்டிய மாடுகின்றாள்
*
தண்ணெழில் பூத்திடுந் தாமரை தாங்கிய
தண்டென வேயிடை தானுடையாள் - கரு
வண்டுக ளோவென வாய்மொழி கூறிட
வைத்திடும் தேவதை வாள்விழியாம் - குலப்
பெண்களின் மானமும் பேரெழில் தேகமும்
பின்னிய தேயவள் சீதனமாம் - நற்
பண்புக ளோங்கிய பாதையி லேசெலும்
பண்டையை மாதரின் பாங்குடையாள்
*
மின்னலி னாலொரு மெல்லி

மேலும்

நன்றி ஐயா 29-Nov-2022 1:56 am
எழுத்து அன்பர்களே வணக்கம் முழநீளந் தொங்க முழங்குதல் விட்டுப் பழகுநட ராசரைப் பார்த்து 28-Nov-2022 9:49 am
மிக்க நன்றி 27-Nov-2022 1:17 am
அழகுத் தமிழில் அருமையான கவிதை. 18-Nov-2022 12:17 pm
மேலும்...
கருத்துகள்

மேலே