Kannan selvaraj - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Kannan selvaraj |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 12-Apr-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-May-2021 |
பார்த்தவர்கள் | : 246 |
புள்ளி | : 63 |
ஆலமரம் பழுதடைந்து
அடி சாயும் வேளையிலே
நல் முளைத்த விழுதுகளோ
நான்கு பக்க தூண்களாகும்
பெற்றவர்கள் ஏழ்மை நிலை
பெற்று துயர் படும்போது
அவர் பெற்ற மக்கள் நிலை
இருக்க வேண்டும் விழுதுகளாய்
நிமிர்ந்த தலை ஆண்களையும்
தலை குனிய பழக்குகிறது
செல்போன்
வயிற்றில் ஏதோ புதிய உணர்வு
அம்மா இல்லாத போது
பசி
செக்கச் சிவந்த வானத்தில் - ஓர்
சேதமடைந்த மேகம் - அது
சேர்த்து வைத்த மழைத்துளியினை
இழுக்கும் உந்தன் தேகம்
நீ இருக்கும் நேரம் பார்த்து
நிமிடத்திலே வருமே - உன்
கண்ணின் ஓரம் ஊர்ந்து அது
கடிதம் ஒன்று தருமே
முத்து போன்ற பல்லிடுக்கில்
முத்தம் ரெண்டு கொடுக்கும்
உன் முன் அழகில் மூச்சு முட்டி
மூர்ச்சை ஆகி கிடக்கும்
நீ குடிக்கும் நீரும் ஆக
மாறத்தானே துடிக்கும் உன்
எச்சில் பட்டே எமலோகம்
செல்ல அது துடிக்கும்
சிந்தையிலே பூ பூத்து
சிற்றின்ப தேன் கசிந்து
வஞ்சி மகள் வழியோரம்
வாய் சிரித்து நின்றிருந்தாள்
போகும் வழி தெரிந்திருந்தும்
போய் முடிக்கும் பணி இருந்தும்
பொன் மகளைப் பார்த்த கணம்
நகர கால்கள் மறுக்கிறதே
வண்டு மொய்க்கும் பூ கண்கள்
வா வா என்றழைக்கிறதே
வாழ்ந்துப் பார்க்க வேண்டுமென்று
வாஞ்சை மனம் துடிக்கிறதே
சாஸ்திரங்கள் படித்திருந்தும்
சத்தியம் பல புரிந்திருந்தும்
இந்த நொடி போதும் என்று
இருட்டில் கால்கள் நுழைகிறதே
நான்கு பக்க சுவர் அடைத்து
நடு நரம்பும் முறுக்கெடுத்து
அருகிலிருக்கும் பெண்ணைதொட்டு
அணைக்க நெஞ்சம் மறுக்கிறதே
கடைத்தெருவே சென்றபோதும்
கடற்கரையில் இருந்த போதும
சூடு கொண்ட காஃபி கூட
சூட்டை கொஞ்சம் தணிக்கிறதே
அடுப்பில் இருந்து இறக்கி வைத்த
ஆறு நிமிட இடைவெளியில்
மனிதன் கொண்ட கோவம் மட்டும்
வாழ்க்கை முழுதும் தொடர்கிறதே
மறதி என்னும் நோயும் அங்கு
மறந்து கொஞ்சம் கிடக்கிறதே
நட்டு வைத்த செடியும் கூட
நான்கு ஆண்டில் மலர்கிறதே
மக்கிப் போன இலைகள் உண்டு
மலர்கள் தன்னில் கொடுக்கிறதே
வருடம் பலவும் ஓடினாலும்
வறுமை மட்டும் வளர்கிறதே
வளர்ச்சி எங்கள் மக்கள் உடலில்
வயதில் மட்டும் உயர்கிறதே
குவிந்து கிடக்கும் குப்பைக் கூட
கொஞ்ச நாளில் மறைகிறதே
கோடை வெயிலில் பறவைகளும்
இரையைத் தேடி பறக்கிறதே
கொட்டி கிடக்கும் வளங்களை நம்
மக்கள் மனங்கள் மறக்கிறதே
ஓடும் பேருந்தில்
ஒய்யாரமாய் அமர்ந்திருந்தேன்
அவள் வருவாள் என்று
நிறுத்தம் வந்தது
அவள் வரவில்லை
கண்களில் கண்ணீர் வந்தது
மேகமாக மாறி நானும்
மேலை நாட்டில் பறக்க ஆசை
மேற்கு தொடர்ச்சி மலையிலேறி
மெத்தை இன்றி உறங்க ஆசை
சிட்டுக்குருவி போலே நானும்
சிறகடித்துப் பறக்க ஆசை
சிந்து நதியினைப் போலே
இமயமலையில் பிறக்க ஆசை
அறுஞ்சுவையின் உணவளித்து
அம்மாவினைப் பேண ஆசை
ஆத்திச்சூடி சொல்லி தந்த
ஔவையாரைக் காண ஆசை
எல்லோரா குகைகளிலே
எனதோவியம் வரைய ஆசை
எட்டடியில் நிலவு செல்ல தூரம்
வானில் குறைய ஆசை
எடிசன் பல்பு கண்டறிந்த
நேரம் அருகில் இருக்க ஆசை
ஏகலைவனைப் போலே
ஏழு வித்தை கற்க ஆசை
நியூட்டன் கையில் கிடைத்த ஆப்பிள்
சுவையை நானும் ருசிக்க ஆசை
நியூடெல்லி கோட்டைச் சுவற்றில்
கொடியினை நான் ஏற்ற ஆசை
அட்சரேகை தீர்
பூவுக்குள் பூக்காது
ஒரு பூவைக்குள் பூத்து
வந்தசாமி
பல்லாயிரம் பேருக்கு
வேலை வாங்கித்
தந்தசாமி
கந்தலாய் கிடந்த ஏழை மக்கள் மகிழ்ச்சியாய் வணங்கும் கந்தசாமி
மண்ணுள் தோன்றாது
ஒரு பெண்ணுள்
தோன்றிய தங்க சாமி
பூமியை காக்காது இப் புதுவையை காக்கும் நரசிங்க சாமி
அது எந்த சாமி
அவர்தான் எங்களின் இதய தெய்வம் திரு ந. ரங்கசாமி
இவர் புதுவையில்
பிறந்த புது வெய்யில்
இன்று புதுவை இவரின் கையில்
புதுவையின் வளர்ச்சி
இவரின் பேனா மையில்
இல்லாதவர்களுக்கு கொடுப்பதற்காகவே எப்போதும் நிறைத்து வைத்திருப்பார் பொருளை இவர் சட்டைப் பையில்
இவர் பலருக்கு சாமியாக இருக்கப் போகிறார் என்பதை அற
ஜன்னலிலே தென்றலது
சத்தமின்றி நுழைகிறதே
சாலையிலே நீ நடக்க
சாமந்தி பூ பூக்கிறதே
மெல்ல மெல்ல நடப்பவளே
மேலாடை மறைப்பவளே
புள்ளி வைத்து கோலமிட
பூமிதாயும் கெஞ்சிடுதே
அள்ளி முடியும் கூந்தலிலே
ஆவாரம்பூ மலர்கிறதே
அன்னமிட்டு கொஞ்சிடவே
ஆண்கள் பலர் கெஞ்சினரே
துள்ளி நீயும் குதித்திடவே
தூரப்பார்வை முதியவர்கள்
கண்ணின் ஒளி வேண்டுமென
காஞ்சி கோவில் சென்றனரே
மல்லிகைப்பூ மொட்டெடுத்து
மாலையில் நீ சூடிடவே
மாந்தோப்பு மரங்களெல்லாம்
மார்க்கமாக பார்க்கிறதே
சட்டை அணியா சந்திரனே - பல
சாதனை புரிந்த மந்திரனே
ஏழை மக்களின் எந்திரனே - நம்
இந்திய தாயின் சுந்தரனே
விடுதலை பூட்டின் சாவியுமே - நின்
விரல்களில் வைத்தாய் காவியமே
போரிலே அமைதியை நாட்டிடவே -நீ
போர்பந்தரிலே பிறந்தாயே
சத்திய சோதனை நீ எழுத - அந்த
சரஸ்வதி தேவியும் மை கொடுக்கும்
சரித்திரத்தில் உன் பெயர் எழுத-வின்
சந்திர மண்டலம் தூதனுப்பும் .
உப்புக்கு என் வரி கொதித்தாயே- உன்
உடம்புக்கு வலிப்பதை மறந்தாயே
தண்டி யாத்திரை புரிந்தாயே- தன்
மக்களின் துயரினை துடைத்தாயே
வெள்ளையனே நீ வெளியேறு-என
வேங்கையின் குரலில் நீ கூறு
வெள்ளை மனத்தினன் உனை காண-பல
வேற்று கிரகத்
தாமரை மலர்ந்தது .....
காலைக் கதிரோன் கிரணத்தால்
செவ்விதழ் திறந்து புன்னகைத்தாள் அவள்