மீண்டும் காந்தி

சட்டை அணியா சந்திரனே - பல
சாதனை புரிந்த மந்திரனே
ஏழை மக்களின் எந்திரனே - நம்
இந்திய தாயின் சுந்தரனே

விடுதலை பூட்டின் சாவியுமே - நின்
விரல்களில் வைத்தாய் காவியமே
போரிலே அமைதியை நாட்டிடவே -நீ
போர்பந்தரிலே பிறந்தாயே

சத்திய சோதனை நீ எழுத - அந்த
சரஸ்வதி தேவியும் மை கொடுக்கும்
சரித்திரத்தில் உன் பெயர் எழுத-வின்
சந்திர மண்டலம் தூதனுப்பும் .

உப்புக்கு என் வரி கொதித்தாயே- உன்
உடம்புக்கு வலிப்பதை மறந்தாயே
தண்டி யாத்திரை புரிந்தாயே- தன்
மக்களின் துயரினை துடைத்தாயே

வெள்ளையனே நீ வெளியேறு-என
வேங்கையின் குரலில் நீ கூறு
வெள்ளை மனத்தினன் உனை காண-பல
வேற்று கிரகத்திலும் ஆள் வருமே

சிறைச்சாலை நீ சென்றிருந்தாய்-பல
சிலந்தி வலைகளை வென்றிருந்தாய்
ஆங்கில அரசினை கொன்றிருந்தாய்-அதிலும்
அகிம்சை வழியிலே சென்றிருந்தாய்

சாதனை புரிந்த சரித்திரமே -உனை
சந்திரன் காண கோபம் வரும்
சத்தியாகிரக நாயகனே - ஏன்
சந்திர கிரஹத்தில் பிறக்கவில்லை

இந்திய நாட்டை வல்லரசாய் - நாங்கள்
இன்னும் ஆக்கவில்லை நல்லரசாய்
பூக்களை தூவி வேண்டுகிறோம் - இந்த
பூவுலகில் மீண்டும் நீ(ர்) பிறக்க

எழுதியவர் : கண்ணன்செல்வராஜ் (10-Dec-21, 11:50 am)
Tanglish : meendum gandhi
பார்வை : 183

மேலே