மக்கள் முதல்வர் ரங்கசாமி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கவி

பூவுக்குள் பூக்காது
ஒரு பூவைக்குள் பூத்து
வந்தசாமி

பல்லாயிரம் பேருக்கு
வேலை வாங்கித்
தந்தசாமி

கந்தலாய் கிடந்த ஏழை மக்கள் மகிழ்ச்சியாய் வணங்கும் கந்தசாமி

மண்ணுள் தோன்றாது
ஒரு பெண்ணுள்
தோன்றிய தங்க சாமி

பூமியை காக்காது இப் புதுவையை காக்கும் நரசிங்க சாமி

அது எந்த சாமி

அவர்தான் எங்களின் இதய தெய்வம் திரு ந. ரங்கசாமி


இவர் புதுவையில்
பிறந்த புது வெய்யில்
இன்று புதுவை இவரின் கையில்
புதுவையின் வளர்ச்சி
இவரின் பேனா மையில்

இல்லாதவர்களுக்கு கொடுப்பதற்காகவே எப்போதும் நிறைத்து வைத்திருப்பார் பொருளை இவர் சட்டைப் பையில்

இவர் பலருக்கு சாமியாக இருக்கப் போகிறார் என்பதை அறிந்து தான் இவரின் பெற்றோர் இவருக்கு ரங்கசாமி எனப் பெயர் சூட்டினர்.

நல்லவர்க்கு இவர் ரங்கசாமி
தீயவர்க்கு இவர் ராங்கான சாமி
ஏழைகளுக்கு இவர் ந. ரங்கசாமி
எதிரிகளுக்கு இவர் நரசிங்கசாமி

புயல் இவரின் புன்னகையின்
முன் முயல்
முன்னம் ஆண்டவரின் பேனா மையால் காய்ந்து கிடந்து
இவரின் பச்சைப் பேனா மையால் பச்சையானது
விவசாயிகளின் வயல்

மக்களுக்காக
புதுமைகளை எப்பொழுதும் செய்து கொண்டிருக்கும் இவரின் செயல்
இவர் புதுவையின் வளர்ச்சிக்காக திருவள்ளுவர் எழுதிய செய்யுள்

இந்திய பெருங்கடலாய் இவர் புகழ் நீண்டு இருக்கட்டும் இவ்வுலகை ஆண்டு இருக்கட்டும் அதற்கு துணையாய் இந்த ஆண்டு இருக்கட்டும்

இவர் ஊராண்டும் இப்பாராண்டும்
நூறாண்டும் வாழ அன்போடு வாழ்த்துகிறோம்

எழுதியவர் : குமார் (3-Aug-23, 10:34 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 43

மேலே