பூக்கோத்ரா

பெண் பார்க்கப் போன வீட்டில்:

உங்க பொண்ணை வரச்சொல்லுங்க.

@@@@@

பொண்ணை அழைச்சிட்டு வாங்க.

மாப்பிள்ளை வீட்டார் பார்க்கணும்.

@@@@@@

(அழ்கான பெண் அழைத்து வரப்படுகிறார்.

எல்லோருக்கும் வணக்கம் சொன்ன பிறகு

தேநீர் கொடுக்கிறார்.

மாப்பிள்ளைப் பையனின் அம்மா அவரது


கணவனிடம் "பொண்ணு ரொம்ப அழகா

இருக்குதுங்க" என்று முணுமுணுக்கிறார்.

அவரும் "ஆமாம்" என்கிறார்.

@@@@@@@@

மாப்பிள்ளைத் தம்பிக்குப் பொண்ணைப்

பிடிச்சிருக்குதுங்களா?

மாப்பிள்ளை மதனேஷ் புன்னகையுடன்

தலையை ஆட்டி தன் விருப்பத்தைத்

தெரிவிக்கிறான்.

@@@@@@@

மாப்பிள்ளைத் தம்பி பேரு என்னங்க?

@@@@@@

மதனேஷ்

@@@@@@##@

பொண்ணுப் பேரு என்னங்க?

@@@@@@@

பொண்ணுப் பேரு பூக்கோத்ரா.

@@@@@@@

என்னங்க தமிழும் இந்தியும் கலந்த பேரா

இருக்குதுங்க?


@@@@@

எங்களுக்குக் கொஞ்சம் தமிழ்ப் பற்று


உண்டுங்க. வடக்க மல்கோத்ரானு பேரு

வச்சுக்கறாங்க. அதே மாதிரி பேரு வச்சுக்க


ஆசைப்பட்டு எங்க பொண்ணுக்கு


'பூக்கோத்ரா'ங்கிற புதுமையான பேரை

வச்சிருக்குறோமுங்க.

@@@@@@@@@

ரொம்ப சந்தோசமுங்க. பொண்ணுக்கு

மாப்பிள்ளை பிடிச்சிருக்குதானு கேளுங்க.

@@##@#@@@

என்னம்மா பூக்கோத்ரா மாப்பிள்ளையை

உனக்குப் பிடிச்சிருக்குதா?


(பெண் பூக்கோத்ரா வெட்கத்தோட கீழே

பார்த்துட்டு வலது கால் பெருவிரலை தன்

இடது பக்கமும் வலது பக்கமும் தரையில்

உரசுகிறார்.

@@@@@@@

அப்பறம் என்னங்க. மாப்பிள்ளையும்

பொண்ணும் ஒருவரையொருவர்

விரும்பறாங்க. இப்பவே தட்டு

மாத்திக்கலாமுங்க

@@@###

அதுவும் சரிதாங்க.

எழுதியவர் : மலர் (18-May-25, 8:01 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 8

மேலே