சட்டம் ஒரு பக்கம் அத்தியாயம் 1

சட்டம் ஒரு பக்கம் : அத்தியாயம் 1

நிகழ்வு ஆண்டு: 16 ஆம் நூற்றாண்டு
இடம்: மேலக்கலங்கல்


நதிகள் பல ஓடியும்,மழை மும்மாரி பெய்தும் பச்சை பச்சையாக நெற்கதிர் திமிராக நிமிர்ந்து..நிற்கும் வயல்வெளியும்..மா,பலா,வாழை முக்கனி காய்த்து குலுங்கும் மூவேந்தர் ஆட்சி காலத்தில் மறவர் குல பாண்டிய மன்னன் ஆட்சி செய்த மண் மேலக்கலங்கல் 18 பட்டி ஜமீன்...

களப்பிரர்கள், பல்லவர்கள் போன்றோரும்.....மராத்தியர்கள், ஆங்கிலேயர்கள் போன்றோரும் படையெடுத்த போதும். சேர சோழ பாண்டிய உள் நாட்டு படையெடுப்பு..தில்லி சுல்தான் முகலாயப் படையெடுப்பு ...விஜயநகரப் பேரரசின் குமார கம்பணன் ஆகியோரின் படையெடுப்புகள் தமிழகத்தில் நிகழ்ந்த போதும்.. இவர்களால் ஒரு கை அளவு மண்ணைக் கூட தொட முடியாமல்... பின்வாங்கி ஓட வைத்த தமிழகத்தில் ஒரே ஜமீன் வீரமிக்க மறவர் குல பாண்டிய மன்னர்கள் ஆண்ட மேலக்கலங்கல் 18 பட்டி ஜமீன் மட்டுமே..என்பதே வரலாறு..

வெள்ளைக்காரனால் மேலக்கலங்கல் 18 பட்டி ஜமீன்தார்களிடம் வரியும் வசூல் செய்ய முடியவில்லையே.. போரும் செய்ய முடியவில்லையே.. தனது மதத்தையாவது இவர்களிடம் பரப்பிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் அதில் வெற்றியும் பெற்றான்... ஆம்..

18 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய தேசத்தை சார்ந்த கிருத்துவச் சமயப்பரப்பாளர் இராபர்டு கால்டுவெல்லை மேலக்கலங்கல் பகுதிக்கு அனுப்பி வைத்தனர் வெள்ளையன்...

ஒரே இந்துவாக சமய மக்களாக கெளதல மாடன், கருப்பசாமி, பேச்சியம்மன்,துர்கா ,காளி போன்ற தெய்வங்களை குல தெய்வமாக வணங்கி வந்த மேலக்கலங்கல் மக்களிடம் கலங்கத்தை ஏற்படுத்தி கலங்களில் கிருத்துவ மதத்தை ஊன்றினான் இராபர்ட் கால்டுவெல் குழுவினர்

18 ஆம் நூற்றாண்டில் ஒரு சித்திரை திங்களில் கெளதல மாடனுக்கு திருவிழா எடுத்து அக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட மறவரின 8 குடும்பங்கள் வணங்கிய போது... ஏற்பட்ட மோதலில் நான்கு குடும்பத்தார் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலை அறிந்த இராபர்ட் கால்டுவெல் குழு அவர்களுக்கு உதவியதோடு.. அவர்களை கிருத்துவ சமயத்துக்குள் இழுத்து கொண்டான்.. இப்படித்தான் மேலக்கலங்கல் ஊரில் கிருத்துவம் வந்தது..200 ஆண்டு கடந்த நிலையில் இன்று அந்த 4 குடும்பம் 400 குடும்பமாக வாழ்கின்றனர்..

நிகழ்வு ஆண்டு: 1990 ஆம் ஆண்டு
இடம்: புனித குழந்தை ஏசு ஆலயம்.. மேலக்கலங்கல்

வெள்ளை நிற அங்கியில் சிகப்பு நிற பட்டை இடுப்பை சுற்ற பார்சல் செய்து கிஃப்ட் பாக்ஸ் போல் செந்நிற கதிர் போல் பலி பீடத்தின் முன் நின்று.. அதிகாலையில் கிருஸ்துமஸ் நற்செய்தி வழங்கினார் பாதிரியார் ஜான் பிரான்சிஸ்...
ஊர் மக்கள் முழங்காலிட்டு அவர்கள் தேவையை பய பக்தியோடு மெய்மறந்து வேண்டிக் கொண்டிருந்த.. மக்கள் அலையில் தீடிரென்று ஒரு புயலாக நிகழ்ந்தது அந்த நிகழ்வு..

( குறிப்பு : கதை மற்றும் கதையில் வரும் பெயர்கள் கற்பனையே)

தொடரும்...

சமத்துவ புறா ஞான.அ.பாக்கியராஜ்
மேலக்கலங்கல்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்கியராஜ் (28-Dec-25, 9:30 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 10

மேலே