பையன் பேரு ஜகத்குரு ________
பள்ளி மாணவர் சேர்க்கை
@@@@@@@
மங்களசாமி, அடுத்தது யாரு? அனுப்பி
வை
@@@@@@
சரிங்க ஐயா. நீங்க தலைமை ஆசிரியர்
அறைக்குப் போங்க ஐயா.
@@@@
(பெற்றோரும் அவர்களது பையனும்
தலைமை அசிரியர் அறியில் நுழையும்
போது "வணக்கம் ஐயா" என்று
கூறுகிறார்கள்)
@@@@@@
வணக்கம். வாங்க. உட்காருங்க. பையனின்
பிறப்புச்
சான்றிதழைக் குடுங்க. (பிறப்புச்
சான்றிதழைப் பார்த்துக்கொண்டு)
என்னங்க உங்க பையனுக்கு 'ஜகத்குரு
மணியானந்தா'னு பேரு வச்சிருக்கிறீங்க?
அதுக்கு என்ன காரணம்?
@@@@@@@
(பையனின் தந்தை): ஐயா, என் பேரு
'சந்நியாசி'ங்க எங்க தாத்தா பேரை எங்க
அப்பா எனக்கு வச்சிட்டாருங்க. எங்க
தாத்தாவோட ஆசை நான் பெரிய
சாமியாராகி கோடிக்கணக்கில்
சம்பாதிக்கணுமாம். அது தான் அவரோட
கனவு. நான் வழி தவறிப் போயி திருமணம்
செய்து குடும்ப வாழ்க்கையில்
ஈடுபடவேண்டிய சூழ்நிலை
ஏற்பட்டிருச்சுங்க ஐயா. என்னோட மகன்
மூலமா எங்க தாத்தா கனவை
நிறைவேத்தணும் சபதம் எடுத்து
பையனுக்கு 'ஜகத்குரு மணியானந்தா'னு
பேரு வச்சேனுங்க.
@@@@@@
ஜகத்குரு சரி. மணியானந்தா?
@@@@@@@
ஐயா ஆங்கிலத்தில பணத்தை என்னன்னு
சொல்லறோம்?
@@@@@@
மணி (Money). இந்தப் பையன் சாமியாராகி,
ஜகத்குரு ஆகி கோடியாச்
சம்பாதிக்க்ணும்னு மணியானந்தாவை
"ஜகத்குரு'கூடச் சேர்த்துட்டீங்களா?
@@@@@@
ஐயா பிரபல சாமியார்கள் எல்லாம் பல
கோடிகளுக்கு அதிபதியா இருக்கிறாங்க.
என் பையனும் அது போல ஒரு கோடீஸ்வர
சாமியாரா வரணுங்கற ஆசையிலதாங்க
அவனுக்கு இந்தப் பேரை வச்சேனுங்க.
@@@@@@@
பெத்த பிள்ளைக்கு பேரு வைக்கிறது
பெத்தவங்களுக்கு உள்ள உரிமை.
மங்களசாமி இந்த 'ஜகத்குரு
மணியானந்தாவை ஒண்ணாம் வகுப்பு
'ஈ' பிரிவில் விட்டுட்டு வா.
@@@@@@@
(பெற்றோரைப் பார்த்து) சரி நீங்க
போகலாம். ஜகத்குருவை ஏழரை
மணிக்குள்ள பள்ளில விட்டுட்டுப் போங்க.
சத்தான காலைச் சிற்றுண்டி உண்டு.
மத்தியானம் (ஓடு நீக்கிய)
முட்டையுடன் சத்துணவு வழங்கப்படும்.
@@@@@@@@
ரொம்ப நன்றிங்க ஐயா.