வாழ்க்கைத்துணை

நெற்றியிலே இட்ட திலகம்
நேசப் போரிலே விலகும்

பிச்சைக்காரன் குரலும் மிங்கே
பிரளயத்தையே விழுங்கும்

கடிகாரம் வெட்கப்பட்டு
கம்பளியால் மூடச் சொல்லும்

வைகையிலே பொழிந்த வெள்ளம்
வங்கக்கடலிலே கலக்கும்

சட்டிப் பானை உருட்டல் சத்தம்
சந்ததியாய் வந்து கத்தும்

வானவில்லில் ஊஞ்சலிட்டு
வாரிசென்று பெருமை பேசும்

வாலிபமே கடமை என்னும்
யாகத்தீயிலே பொசுங்கும்

வாழ்ந்து காட்டவேண்டுமென்ற
வாழ்க்கைப் பாடம் புரியும்வேளை

வானவில்லில் தூங்கியவன்
வஞ்சி மடியில் தூங்கிடவே

வாரிசென்னும் கடிகாரம்
வழக்கம்போல கூச்சல் போடும்

நினைத்துப்பார்க்கும் நேரத்துக்குள்
நீண்டகாலம் ஓடிப்போகும்

காதோரம் நரைத்த முடி
கருப்பு மையில் நீராடும்

காலனவன் வரும் வேலை
கண்களுக்கு தெரிந்து போகும்

பிரம்மதேவன் கணக்கு நோட்டில்
கடைசிபக்கம் புரட்டிவிட

எருமைமாட்டின் முதுகிலேற
ஏணிக்கால்கள் தரையிறங்கும்

சொர்க்கத்திலே சென்று நீயும்
சொப்பணத்தில் விழித்தெழுந்து

விட்ட குறை தொட்டகுறை
விட்டுப்போச்சு என்றறிந்து

விண்ணிறங்கி வந்து நீயும்
வீதியிலே பார்க்கையிலே

கூடி மகிழ்ந்த மனைவியுந்தன்
கூடருகே தூங்கிவிட்டாள்

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (3-Aug-23, 8:57 pm)
சேர்த்தது : Kannan selvaraj
பார்வை : 171

மேலே