ஒன்னு இருக்கு
ஒன்னு இருக்கு 
பழகிப் போன பாட்டி
பட்டியல் போட்டது 
நினைவு கூற…..
கடவுளை நம்பு
பயப்படாதே சாவ
இன்று படு நாளை எழுந்தால் 
உனக்கு உண்டு உணவு !
அட டா 
முனிவர் கூறவேண்டியதை
இந்த பல்லில்லா கிழவியால…
இப்படி சொல்ல முடிந்ததே !
அனுபவம் பேசுதோ !
இல்ல காலத்தை வென்ற …….
தீர்க்கதரிசியோ !
பேராண்டி என்னத்த யோசன பண்ற 
எதுவுமில்ல இங்க  !
புதுசா கண்டுபிடிக்க ……
ஒன்னு இருக்கு
வெளிய தேடாதே 
உள்ளேயெ தேடு
காரணம் 
அதுக்குதான் நானும் வந்தேன்
இன்னும் தான் 
வெத்தல பாக்கு இடிக்கர மாறி
இடி இட்ன்னு இடிச்சி
தேடோன்னு தேடெறன்….
வாய அசை போட்டு
முழு மூச்சா !

