புது வரவு

புது வரவு

விரல் வீக்கத்தை
காட்டப் போக
விவரமா கதை சொன்ன
நாடிப்பிடி டாக்டர்
கைமேல் பெரிய பில்லை
கையெழுத்திட
வங்கி கணக்கு கண் கலங்கியது !

கைக்கு வந்தது
கடனை கட்டி
கனவுக்கு ஆறுதல் சொல்ல
சுய ஆலோசனை தவுடு பொடி !

ஒரு வேலை முடிய
மறு வேலை ஆர்ப்பாட்டம்
வலைந்து வலைந்து ஓடியது
வழுக்கியதால் கால்வாய்
வரவில் வைத்தது
என் வரவை எதிர் பாராமல்
பின் குறிப்பில்
புது வரவு….
நல் வரவாகுக என மொழிந்து !

எழுதியவர் : மு.தருமராஜு (9-Mar-25, 2:39 pm)
Tanglish : puthu varavu
பார்வை : 24

மேலே