எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனாதைகள் என்றழைத்தால் என் மனது நிரம்பி வழிகிறது வருத்தமிகு...

அனாதைகள் என்றழைத்தால்  

என் மனது நிரம்பி வழிகிறது 
வருத்தமிகு காட்சிகளளால் !
ஆழ் கடல் முழுதும் உள்ள 
சோக அலைகள் எழுகிறது !
ஆதரவற்றவர் என உச்சரித்தால் 
ஈர நெஞ்சங்கள் இரு கரம் நீட்டிடுக  !

நம்பி வந்தவருக்கு உதவிடுவார் 
என்றெண்ணி இருந்த எவரும் 
யாசித்து காத்திருந்த பலரை 
யோசிக்க வைக்குது இந்நிலை !

வாழும் மனிதர்களை 
வையகமே நினைத்திடு  !
வறுமையின் சிக்கி தவிப்போரை 
ஆதரவின்றி  அகிலத்தில் வாழ்வோரை 
நல்  உள்ளங்களே இயன்றதை செய்திடுக !


பதனி குமார் 

நாள் : 3-Nov-25, 6:12 am

மேலே