வீக்கம்

வீக்கம்


விவரம் தெரிந்த நாள் முதல்
அறிந்து கொண்டது
பல விதமான உண்மைகள்
சில நேரங்களில்
சில மனிதர்களும்
பல வேளைகளில்
பல வகை வேதனைகளும் !

இதில்
அதிசயம் யாது எனில்
கேட்டு தெரிந்து கொண்டு
பவ்வியமாக புரட்டி போடுவார்கள் !
இதனை சமாலிக்க வேண்டி
துல்லியமாக தன் நிலையறிந்தவர்
காது கொடுத்து கேட்டு
இப்படி அப்படி இருக்குமோ
அதனால் தான் ஆகிவிட்டதோ !
என குலம்புவார்
கறிச் சட்டிக்குள் சாதத்தை
கடத்தி தன் கைவரிசையை காட்டி !

இருக்கட்டும்
தடுக்கத்தான அறியுரை
ஈரேழ் நாட்கள் போக
எழுந்து நடக்க
அடைத்த கொழுப்பு
விடை பெற்று விடுமாம்
நடராஜா டாக்டர் சொன்ன கதை !

என் நிலை
எனக்கு தெரியும்
அவருக்கு என் நன்றி
பிறந்த போது இருந்த என் மேனி
பெருத்து வீக்கம் காணச் செய்தது
என் குற்றம் !
சாப்பாடு என்னை தண்டித்துவிட்டது
வயிறு கேட்ட கேள்வி
தலை குணிய வைத்துவிட்டது !
இனி அந்த தவறு நிகலாது !
கட்டிப் போட தேவையில்லை
அடங்கி குகைக்குள்ளே
இருந்து இட்ட வேலையை செய்ய…….


வேலா வேலைக்கு
வேண்டும்படி
எடுத்துக் கொண்டால்
போதுமாம் !
எப்படி ?
நாவிற்று
நல்ல ஓய்வு தேவையாம் !
என்றும் அவதிப்படாமலிருக்க !

எழுதியவர் : மு.தருமராஜு (12-Mar-25, 8:44 pm)
Tanglish : veekam
பார்வை : 9

மேலே