என் எண்ணத்தில்

விளக்கேற்றி வைத்தும்  
ஒளியிழந்து கிடக்கிறது ஏ
ழையின் வயிறு !

அரைகுறை ஆடையில் 
அரங்கேற்றம் வீதியில்வ
றுமையின் விளிம்பு  !

நேற்று பழமுதிர் சோலை 
இன்று சகாரா பாலைவனம் 
அரசியல் கட்சி மாநாடு !

காலையில் ஆரத்தழுவுதல்  
மாலையில் கீழே தள்ளுதல் 
அரசியல் விளையாட்டு !

காத்துக் கிடக்கின்றனர்
 நடுநிசியில் பசி துறந்து 
மறுநாள் முதல் காட்சி !

காலையில் சொற்பொழிவு 
மாலையில் சொற்சோர்வு
உபயம் மது மயக்கம் ! 


பழனி குமார் 

எழுதியவர் : பழனி குமார் (29-Sep-25, 7:57 am)
சேர்த்தது : பழனி குமார்
Tanglish : en ennathil
பார்வை : 5

மேலே