தமிழ்நாடு

#தமிழ் நாடு 50

கங்கைகிணை என காவேரி
பாய்ந்திடும் செந்தமிழ் நாடு
வந்தோரை வாழ்ந்திட வைத்திடும்
வையகம் போற்றிடும் நாடு..!

தெற்கில் பெருங்கடல் ஆடும்
முக்கடல் கூடல் அழகாகும் - வள்ளுவன்
பாதம் தொட்டுமங்கு கடலும் - திருக் குறள்புகழ்தன்னைப் பாடும்…!

வங்க விரிகடல் கிழக்கில்
அள்ளித்தரும் பொருள் சிறப்பில்
மேற்கு வடக்கிலும் மலைகள்
எங்கள் நாட்டின் எழில் மிகு எல்லைகள்..!

சேர சோழ பாண்டிய மன்னர்கள்
ஆண்ட வீரத் திரு நாடு
முச்சங்கங்களை வளர்த்தார் - அதை
செந்தழில் சொல்லிப்பாடு..!

வாள்வில் வித்தையொடு களரி - கற்று வாழ்ந்திருந்தார் வீரத்தோடு
புலி கண்டால் ஓட்ட பெண்களும்
காத்திருப்பார் முறத்தோடு..!

எண்ணெய்க் கனிமங்கள் இன்னமும்
பொன்னும் மணி விளை நாடு
உண்ணும் பொருள் பல விளையும்
மண்ணும் மணம் கொண்ட நாடு..!

ஓங்கி நிற்கும் கோவில் கோபுரமும்
தாங்கிடும் ஆயிரங்கால் மண்டபம்
எங்களின் கட்டிடக் கலைக்கு சாட்சி
சொல்லும் சோழ மன்னர்களின் ஆட்சி..!

இயல் இசை நாடகமின்னுமாய்
கலை வளர்த்தார் களிப்போடு
இன்பம் விளைவிக்கும் நாட்டினை
கண்ணென காப்போம் விழிப்போடு…!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (27-Sep-25, 9:05 pm)
சேர்த்தது : C. SHANTHI
Tanglish : tamilnadu
பார்வை : 4

மேலே