thiru - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : thiru |
| இடம் | : paramakudi |
| பிறந்த தேதி | : 01-Jun-1982 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 19-Jan-2013 |
| பார்த்தவர்கள் | : 491 |
| புள்ளி | : 106 |
கரும்பாய் மெல்லிதழ் காட்டியே சிரிக்கின்றாய்
அரும்பாய் நெஞ்சிலே ஆசையை விரிக்கின்றாய்
விருந்து வேண்டாமன்பே காதல் நோய்க்கு
மருந்தாய் என்னிடம் வா
அஷ்றப் அலி
என்
செல் போனின்
செல்ல சிணுங்கல்கள்
சிதைக்கின்றன
என்னை
உன் குரல் ஓசை
இல்லாமல்
என் குரல் வளையம்
நெறிகின்றது...
ஊடல் வேண்டாம்
கூடல் வேண்டாம்
உன் கை விரல்
கத கதப்பு போதும்
கசங்கிய
என் இதயத்திற்க்கு
நீண்ட நேர
இரவின் இருட்டில்
என் விழிகளுக்கு
வெளிச்சம் தந்தது
நீ
அன்பாய் பேசிய
அந்த
வார்த்தைகள் தான்.....
நீண்ட நேர
இரவின் இருட்டில்
என் விழிகளுக்கு
வெளிச்சம் தந்தது
நீ
அன்பாய் பேசிய
அந்த
வார்த்தைகள் தான்.....
அன்பே
நீ மூட்டிய
காதல் தீ
பற்றி எரிகிறது
அணைத்து கொள்ளுவேன்
அணைந்து விடட்டும்.....
வாழும் போது புரியாத
வாழ்க்கை போல,
கற்கும் போது புரியவில்லை,
கற்பிக்கும் போது
புரிகிறது, பல
புரியாத புதிர்கள்!
கற்பதுதான் கடினம் அப்பொழுது,
கற்பிப்பதுதான் கடினம்
புரிகிறது இப்பொழுது!
கேலிக்கூத்தும்
கிண்டல்களும் மகிழ்ச்சியாய் அப்பொழுது,
எவ்வளவு இன்னல்கள்
உணர்ந்திருப்பிர்கள்
புரிகிறது இப்பொழுது!
ஆசிரியர்கள் தான் ஏளனம்
அப்பொழுது,
அவர்கள் தான் ஏணிப்படிகள்
புரிகிறது இப்பொழுது!
நல்ல மாணவனாவது
கடினமில்லை,
நல்லாசிரியர் ஆவது
எவ்வளவு கடினம்!
சூரியன் ஒருநாளும்
பலனை பூமியிடம்
எதிர்பார்பதில்லை,
மாணவர்களின்
புகழை ஒருநாளும் - ஆசிரியர்கள்
ஏற்பதில்லை!
என்னென்ன
மின்னலை செதுக்கி சிலையென
வடித்தானோ உன்னை .!
மிளிர்கின்றதே மேனி
பொன்னென பெண்ணே ..
நட்சத்திரங்கள் பறித்து
நீலக்கடலினில் நீந்த விட்டவன்
ஆச்சரியம் கொண்டானோ -அது
அலையில்லா உன்
விழியென கண்டு .!
தேனிலும் இனியது இல்லை என்ற
தேனீக்களின் இறுமாப்பு உடைந்ததோ
தேவதை உந்தன் இதழ் தனை
சுவைத்ததால் .!
வெண்ணிலவிற்கு பால் சேர்த்து
மெல்லிய வெண் மணி செய்து
சிற்பிகள் செதுக்கிய மென் பற்கள்
சித்திரமே உன் வாயில்
சிரிப்பதுவோ .!
அந்தியில் கதிரவன்
சென்நிறமெடுத்து
அழகிற்கு வானவில்லை அதில் குழைத்து
கண்ணே உன்கன்னத்தை
செதுக்கியவன்
ரசனையில் பிரம்மனை மிஞ்சியவன் .
கறுப்பு தோக
(புதிதாய் திருமணமானவர் வீட்டு நினைவுகளுடன்)
அம்மாவுக்கு காய்ச்சல்
அப்பாவுக்கு ஆப்பரேசன்
ஆறுதலாய் பேச
சிக்னல் இல்லா
இந்த கைப்பேசி
ஆசையாய் பேசி
ஆனந்தமாய் ஆடி
பொய்யான சண்டைகளிட்டு
போலியாய் கோபம் கொண்டு
காதல் மழையில்
நனையத்தான் ஆசை
என்
காதல் மனைவியுடன்
மகளே!
ஒவ்வொரு மாதமும்
வளர்கிறாய்
கருவாக
என் உயிராக
ஒவ்வொரு மாதமும்
தேய்கிறேன்
நான்
உன் நினைவாக
என்னை கானவில்லை
என்றுதான்
அழுது அழுது
பிறந்தாயோ
என் செல்லமே!
புதிது புதிதாய் பாஷை
கற்று தந்த ஆசானடி
நீ
உன்னை
கட்டித்தழுவி
முத்தமிட்டு
சண்டையிட்டு
தோற்று போகத்தான் ஆசை
என் செல்ல மகளே!
கண்ணீரில்
நனையும
எவ்வளவுதான்
சுற்றினாலும்
கூண்டை விட்டு
வெளியில் செல்ல முடியாது
கடிகார முள்
........****........
மிதிக்க மிதிக்க
உன்னை முன்னேற்றுகிறது
மிதிவண்டி
..........*****......
சாதிகள் இல்லையடி பாப்பா
என்றது
கோனார் தமிழ் உரை
...........*****........
இரவும் பகலும்
ஒரே மாதிரிதான்
நீ
இல்லாத நாட்களில்
.........******........
மணிக்கொருமுறை
உன்
வீட்டின் அருகே
நான்
நீ
இல்லை என்று
தெரிந்தும்
.........******.......
திரும்ப திரும்ப பேச்சு
கோபம்
ரசிப்பு
அப்பாவிடம் , குழந்தையிடம்
.........*****........
தென்றலின் தொடலும்
சுடுகிறது
செந்தமிழ் பாடலும்
கசக்கிறது
வானத்து நிலவும்
அழகில்லை
நீ என்னருகில்
இல்லை எனில்
பாவம் இந்தப் பூக்களுக்கு
புரியவில்லை
ஏனோ மலர்ந்து சிரிக்கிறது
தெரியவில்லை !
~~~கல்பனா பாரதி~~~