ஜேசுதாஸ் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/lzuxn_27686.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : ஜேசுதாஸ் |
இடம் | : வேலூர் |
பிறந்த தேதி | : 09-Nov-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 182 |
புள்ளி | : 6 |
தமிழ் கவிதைகள் பிடிக்கும்.
வாழும் போது புரியாத
வாழ்க்கை போல,
கற்கும் போது புரியவில்லை,
கற்பிக்கும் போது
புரிகிறது, பல
புரியாத புதிர்கள்!
கற்பதுதான் கடினம் அப்பொழுது,
கற்பிப்பதுதான் கடினம்
புரிகிறது இப்பொழுது!
கேலிக்கூத்தும்
கிண்டல்களும் மகிழ்ச்சியாய் அப்பொழுது,
எவ்வளவு இன்னல்கள்
உணர்ந்திருப்பிர்கள்
புரிகிறது இப்பொழுது!
ஆசிரியர்கள் தான் ஏளனம்
அப்பொழுது,
அவர்கள் தான் ஏணிப்படிகள்
புரிகிறது இப்பொழுது!
நல்ல மாணவனாவது
கடினமில்லை,
நல்லாசிரியர் ஆவது
எவ்வளவு கடினம்!
சூரியன் ஒருநாளும்
பலனை பூமியிடம்
எதிர்பார்பதில்லை,
மாணவர்களின்
புகழை ஒருநாளும் - ஆசிரியர்கள்
ஏற்பதில்லை!
என்னென்ன
எனக்கும்
மழையில் நனைவது
பிடிக்கும்!
அப்பொழுது தான்
என்
கண்ணீர்
யாருக்கும்
தெரிவதில்லை....
எல்லோரும்
வேண்டி நிற்க
நான்
மட்டும் வேண்டாம்
என்கிறேன்
தண்ணீர்!
என்
தாயின் கண்களில்...
எனக்கும்
மழையில் நனைவது
பிடிக்கும்!
அப்பொழுது தான்
என்
கண்ணீர்
யாருக்கும்
தெரிவதில்லை....
விருட்சமாய் நான்
ஆணிவேராய் ஆசான் நீ !
அழகான சிலை நான்
செதுக்கிய சிற்பி நீ !
கவிதை நான்
காரணம் நீ !
மலராய் நான்
மணமாய் நீ !
அறியாத வயதில்
அறிவோளியேற்றி
புரியாத வயதை
புரிய வைத்தவன் நீ !
காகமென கரைந்து
என்னைக் கரைசேர்த்தவன் நீ !
வாழ்க்கை புத்தகத்தின்
முகப்புரை நீ !
இளமைக்கு வலுவூட்டி
இயலாமையை இல்லையென்றாக்கி
வானுயர நான் வளர
வழிவகுத்தவன் நீ !
சுண்ணக்கட்டியில்
தீட்டிய வரிகள்கொண்டு
வண்ணமயமான வாழ்வின்
வழியைக் காட்டியவான் நீ !
என்னை அகிலத்திற்கு
அடையாளம் காட்டிய
அறிவு முலாம் பூசிய
கண்ணாடி நீ !
ஆசான் உன் ஆசிபெறவே
அனுசரிக்கிறேன்
இந்த ஆசிரிய