வே . சுப்ரமணியன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : வே . சுப்ரமணியன் |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 13-Apr-1956 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 89 |
புள்ளி | : 21 |
படிப்பதிலும் , எழுதுவதிலும் ஆர்வம் உள்ளவன் .
காலத்திரயம்
----------------------------------------
நேற்று
நடந்ததைப் பேசிப் பேசியே
வயதாகி விட்டது .
இன்றைய தினத்திலும்
நேற்றைய தினத்தைத்
தோண்டுவதால்
இன்று என்பதே
இல்லாமற் போயிற்று .
நாளைய தினத்திலும்
நேற்றைய தினமே
தூவப்படும் என்பதால்
நாளையும் இல்லாமல்
போய்விடக் கூடும் .
எனினும் ...
எப்போதும் ...
நேற்று
என்பது இனிமைதான் .
[ புதுப்புனல் நவம்பர் 2013 ] இதழில் வெளிவந்த என் கவிதை .
நேற்றும் இன்றும் .
உரசி ஓசையெழுப்பும்
மூங்கில் காடுகளில்
சாம்பல் உதிர்க்கும்
சிகரெட் நுனிகள் .
கவிதைக்காகக் காத்திருந்த
மனத்தில் கலைந்த சொற்றொடர்கள்
கோடுகள் விரவி ஓவியம் மலரும்
கேன்வாஸின் கிழிசல் .
மறையும் நேரத்தில்
ஆதித்தியன் கோபம்
இளங்காற்றின் இறுகிய
தழுவலில் இளகிய விந்தை .
ஜன்னலிற்கு வெளியே
குதிக்கும் குரல்கள்
கிளைகளின் முறிவால்
உதிர்ந்த இலைகள் .
கால இடைவெளி
பிசகிய கணக்கால்
சிட்டுக் குருவிகள்
தனித்தனிக் கூட்டில் .
வெள்ளைச் சுவர்களில்
சிலந்தியின் பின்னல்கள்
இரையாக்க் காத்திருக்கும்
இறகிழந்த பூச்சிகள் .
தொடுதலின் விளைவால்
தொலைந்திருந்த உணர்வுகள்
அறுந்த தந்தியிலும்
ஏமாற்றம் .
ஏனோ தெரியவில்லை
பாட்டி வடை சுடத்
துவங்கவில்லை இன்று .
எண்ணெய் வாங்க மறந்ததினாலோ
அல்லது
உடம்புக்கு முடியாமல் போனதினாலோ
இருக்கலாம் .
காகம் கூட பறந்து விட்டது
வேறு இரை தேடி .
மரத்தடியில்
அமர்ந்திருந்த நரி
சோர்ந்து போய் விட்டது .
கதைக்காக
காத்திருந்த குழந்தை
இன்னொரு பாட்டியின் மடியில்
தூங்கி விட்டது
ஏமாற்றத்தோடு .
[ நவம்பர் 21 – 27 , 2014 பாக்யா ] இதழில் வெளிவந்த என் கவிதை .
தடக்கி விழுந்த இடங்களில் நான் கண்ட இன்பம்
...................................................................................................
தொப்புள் கொடியில் தடக்கிய என் கைகள்
உலகத்தைப் பார்க்க போவதை எண்ணி ...
வைத்தியரின் கையில் தடக்கிய என் விரல்கள்
தாயின் அருகில் இருக்கப் போவதை எண்ணி ...
தாயின் மடியில்தடக்கிய என் கால்கள்
அவளின் அரவணைப்பை எண்ணி .....
தந்தை எனை தூக்கும் பொழுது தடக்கிய அவர் பார்வை
எனை முத்தமிடப் போவதை எண்ணி ....
நடக்கப் பழகிய பொழுது தடக்கிய என் பாதங்கள்
ஏங்கியது என் தந்தை தூக்கி கட்டி அணைப்பதை எண்ணி ...
காலில் தடக்கிய கல்லால்
தூக்கிவிடும்
விருட்சமாய் நான்
ஆணிவேராய் ஆசான் நீ !
அழகான சிலை நான்
செதுக்கிய சிற்பி நீ !
கவிதை நான்
காரணம் நீ !
மலராய் நான்
மணமாய் நீ !
அறியாத வயதில்
அறிவோளியேற்றி
புரியாத வயதை
புரிய வைத்தவன் நீ !
காகமென கரைந்து
என்னைக் கரைசேர்த்தவன் நீ !
வாழ்க்கை புத்தகத்தின்
முகப்புரை நீ !
இளமைக்கு வலுவூட்டி
இயலாமையை இல்லையென்றாக்கி
வானுயர நான் வளர
வழிவகுத்தவன் நீ !
சுண்ணக்கட்டியில்
தீட்டிய வரிகள்கொண்டு
வண்ணமயமான வாழ்வின்
வழியைக் காட்டியவான் நீ !
என்னை அகிலத்திற்கு
அடையாளம் காட்டிய
அறிவு முலாம் பூசிய
கண்ணாடி நீ !
ஆசான் உன் ஆசிபெறவே
அனுசரிக்கிறேன்
இந்த ஆசிரிய
விழும் நீரை
விரட்டி அடித்து
கண்ணீரை உலர்த்தும்
கன்னத்தில் முத்தம்
பாரம் கலைந்து
பாசம் நிறைந்து
நேசம் உண்ர்த்தும்
நெற்றியில் முத்தம்
தோளில் சாய்ந்து
விரலைக் கோர்த்து
கடத்திப் போகும்
கைகளில் முத்தம்
அடிமை அன்று (இல்லை)
அன்பு என்று
விழுந்தேப் பதிக்கும்
பாத முத்தம்
ஊடல் கொதிக்க
கூடல் அணைக்க
இன்பம் கூட்டும்
இதழின் முத்தம்
பிரிவில் வாட
பைத்தியம் கூட
பயனித்துப் போகும்
செல்போனின் முத்தம்
வேண்டாம் என்றும்
விலகிச் சென்றும்
இழுத்தே அளித்த
இனிக்கும் முத்தம்
வலியில் நோக
மெலிந்தே போக
வைத்தியம் பார்க்க
வந்த முத்தம்
முகமது சிவக்
**************************************இதயத்துண்டு**************************************
உன் புகைப்பட
உருவம்
மொத்தமாய்
எனை புதைத்திட!!
என் விழிகள்
சிதைத்த
உன் அழகில்
சிந்தனை மெல்ல
சிதறியது!!
வாழைமர
மட்டையிலே
வழிந்தோடும்
பனித்துளியோ!!
பாவை உந்தன்
பார்வையடி!!
செங்கரும்பு
வயலினிலே!!
சீவி வைத்த
அடிக்கரும்பா!!
அடியேய் உன்
இதழ்கள்..
..
வெண்ணொளி
தெறித்த துகளெடுத்து
வெண்ணையில்
கலந்து செய்த
மெழுகாடி
உன் மேனி!!
கோரை புல்லிலே
வண்ணத்தி
சிறகடிக்கும்
சித்தி (...)
விட்டுப் போன ' பின் குறிப்பு ' .
எத்தனை விதமான
சமையல் குறிப்புகள் !
வாய் வழியாகத்தான்
தொடங்கியிருக்க வேண்டும் .
பாட்டி அம்மாவுக்கும் ,
அம்மா மகளுக்கென்றும் .
பின்னர் நளன் பெயரைச் சொல்லி
ஆண்களும் விற்பன்னர் ஆனது
காலத்தின் கட்டாயம் -
இயற்கையின் நியதி கூட .
பத்திரிகைகளில் ,
பின்னர் வானொலியில் ,
தொடர்ந்து தொலைகாட்சிகளில் .
இப்போது இணையத்திலும் கூட .
விதம் விதமாக
சைவமும் அசைவமுமாக .
தொகுப்பான குறிப்புகள்
தோரணமாகத் தொங்குகின்றன
புத்தகக் கடைகளில் .
ஆனால்
எல்லா சமையல் குறிப்புகளிலும்
விட்டுப் போய் விடுகிறது ஒரு 'பின் குறிப்பு '
" சமைத்த பின் அன்பையும் சேர்த்துப்
ப