எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

**************************************இதயத்துண்டு************************************** உன் புகைப்பட உருவம் மொத்தமாய் எனை புதைத்திட!!...

**************************************இதயத்துண்டு**************************************



உன் புகைப்பட
உருவம்
மொத்தமாய்
எனை புதைத்திட!!
என் விழிகள்

சிதைத்த‌
உன் அழகில்
சிந்தனை மெல்ல‌
சிதறியது!!

வாழைமர‌
மட்டையிலே
வழிந்தோடும்
பனித்துளியோ!!
பாவை உந்தன்
பார்வையடி!!

செங்கரும்பு
வயலினிலே!!
சீவி வைத்த
அடிக்கரும்பா!!
அடியேய் உன்
இதழ்கள்..
..
வெண்ணொளி
தெறித்த துகளெடுத்து
வெண்ணையில்
கலந்து செய்த‌
மெழுகாடி
உன் மேனி!!

கோரை புல்லிலே
வண்ணத்தி
சிறகடிக்கும்
சித்திரமா
சகியே உன்
இமைகள்!!!

இன்னும்!!
உன் அங்கம்
தங்கமாய்
மின்னுதடி!!

கோகினூர்
வைரமும்
தோற்குமடி
கோதை உன்னுள்
கொட்டிய‌
அழகினிலே!!

ஏராளம்
உன் அழகு
என்னிடத்தில்!!
எடுத்துவிட்டால்
பிரபஞ்சம்
போரொன்று
துவங்குமடி
உனக்காக!!

உனை நான்
பார்க்கையிலே
துருவ
பாறையொன்று
துண்டாகி
விழுந்திட்ட‌
உணர்வடி!!
எனக்குள்...

தூரமாய்
போனவள்
நீயடி!!
என் இதயத்தை
துண்டாக்கி
போனவளும்
நீயடி!!...

என் நிலவு
நீயடி!!பிரிவு
முகிலுன்னை
மறைத்ததால்
பூக்காத‌
அல்லி நானடி!!

ரிஷி

பதிவு : அர்த்தனன்
நாள் : 13-Nov-14, 2:34 pm

மேலே