தென்கிழக்கு சூரியனே

தென்கிழக்கு சூரியனே
எங்களுக்கு காவலனே
எங்களோடு வாழ்பவனே
கந்தையா முத்தையா வேல்லையா

சொன்ன சொல்லைக் காப்பவனே
சொல்லில் வாழும் நாயகனே
சுவாமிமலை ஆண்டவனே
கந்தையா முத்தையா வேல்லையா

உன்ன நம்பி நாங்க வந்தோம்
வேண்டுதலை சொல்ல வந்தோம்
எங்க குறை தீர்ப்பவனே
கந்தையா முத்தையா வேல்லையா

அன்பு கொண்ட மன்னவனே
ஆறுபடை கொண்டவனே
உலகையாளும் நாயகனே
கந்தையா முத்தையா வேல்லையா

எழுதியவர் : ருத்ரன் (23-May-25, 3:10 am)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 39

மேலே