ஆசிரியர் நாள் - அழகர்சாமி

விருட்சமாய் நான்
ஆணிவேராய் ஆசான் நீ !
அழகான சிலை நான்
செதுக்கிய சிற்பி நீ !

கவிதை நான்
காரணம் நீ !
மலராய் நான்
மணமாய் நீ !

அறியாத வயதில்
அறிவோளியேற்றி
புரியாத வயதை
புரிய வைத்தவன் நீ !

காகமென கரைந்து
என்னைக் கரைசேர்த்தவன் நீ !
வாழ்க்கை புத்தகத்தின்
முகப்புரை நீ !

இளமைக்கு வலுவூட்டி
இயலாமையை இல்லையென்றாக்கி
வானுயர நான் வளர
வழிவகுத்தவன் நீ !

சுண்ணக்கட்டியில்
தீட்டிய வரிகள்கொண்டு
வண்ணமயமான வாழ்வின்
வழியைக் காட்டியவான் நீ !

என்னை அகிலத்திற்கு
அடையாளம் காட்டிய
அறிவு முலாம் பூசிய
கண்ணாடி நீ !

ஆசான் உன் ஆசிபெறவே
அனுசரிக்கிறேன்
இந்த ஆசிரியர் நாள் !
படைப்பு - (அ.சு )

எழுதியவர் : அழகர்சாமி சுப்ரமணியன் (அ.ச (4-Sep-14, 10:12 am)
பார்வை : 796

மேலே