காவிக்கறை களவாணித்தனம்

இந்திர லோகத்துல
எமராசன் புகுந்த கதை..
மந்திரப் பேச்சி வச்சி
மனுசப்பயல மயக்கும் கதை..!!!

சில்லுன்னு சிரிப்பிருக்கும்
சீரான மூக்கிருக்கும்
வெள்ளைத் தாடியிருக்கும்
வேண்டச் சொல்லி காசு கேக்கும்...!!

எத்தனுக்கு எத்தன்னு
எம்சியாரு வசனமுங்க...
ஆத்திகக் காட்டுக்குள்ள
குள்ளநரி ராசாவாம்...

கதவத் தொற காத்து வருமின்னு
காட்டுப்பய நானுஞ் சொன்னா
கதவடைச்சி மொறச்சிப் பாக்கும்
கஞ்சப்பய... கபோதியெல்லாம்...........

கலருசட்ட கறைகழுவ
காவிச்சட்ட தேடி ஓடும்
காவிச்சட்ட பெருந்திருடன்
கறந்துருவான் கவுத்து வச்சி...!!!

காவிச்சாயம் புளிச்சிப்போக
வேசம்மாறும் வெள்ளைத்தாடி
மனசக் கொரங்காக்கி
மந்திரத்த குச்சியாக்கும்....!!!

குச்சிக்கு கொரங்காட
கொழுப்பெல்லாம் கரைஞ்சோட..
சுருட்டுப்பணம் விரிஞ்சாட
சொகந்தேடும் ஊருக்குள்ள.....!!

ஆள்ரவனெல்லாம் பாதுகாக்க
அடாவடியும் சேத்துத்தூக்க
பாதகமே இல்லாம
பங்குபோகும் பொதுச் சொத்து.....!!

அகண்ட மல பொளந்து
ஆசிரமப் பேரு வச்சி
குகைக்குள்ள கூத்தாடும்
குடுமிவிரிச்ச பேயெல்லாம்....!!

நிர்வாணம் யோகநிலை
நிவாரணம் போதைநிலை....
ஒளருவதெல்லாம் தத்துவம்....
இவிங்கள எப்ப மொத்துவோம்...?!

எழுதியவர் : நல்லை.சரவணா (4-Sep-14, 10:33 am)
பார்வை : 154

மேலே