குறிஞ்சி போல்
குறிஞ்சி பூப்பதற்கு
பன்னிரண்டு ஆண்டு
பூத்த குறிஞ்சிக்கு
எழுதிய கவிதை
வாழும் பல்லாண்டு !
பல் முளைத்துச் சிரிப்பதற்கு
குழந்தைக்கு ஓராண்டு
வாழ்வெல்லாம் சிரித்து வாழ்ந்திட
குழந்தைக்கு பாடுவோம் பல்லாண்டு !
கல்வி தொடரும் பல ஆண்டு
கனவுகள் நனவாக் வாழ்வில் நீ போராடு
தோல்வி வரினும் துணிந்திடு
குறிஞ்சி போல் நீ காத்திரு
பின் வாழ்வாய் நலமாய் பல்லாண்டு !
----கவின் சாரலன்