ப்ரியா - சுயவிவரம்
(Profile)
பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : ப்ரியா |
இடம் | : கன்னியாக்குமரி மாவட்டம் |
பிறந்த தேதி | : 19-Mar-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 5466 |
புள்ளி | : 2412 |
ப்ரியமானவள்.......
பனிமலை எழுத்து
பாலைவன எழுத்து
பாசத்தின் எழுத்து
பரிதவிப்பின் எழுத்து
பிரிவின் எழுத்து
பிறப்பின் எழுத்து
முத்த எழுத்து
முக்தி எழுத்து
மரண எழுத்து
மானுட எழுத்து என
காலத்துக்கும் எழுத்தை
சுமந்த தபால்காரருக்கு
இன்னும் ஒற்றை விரலில்
வாய்க்கவில்லை
வாட்சப் எழுத்து…
- கவிஜி
பனிமலை எழுத்து
பாலைவன எழுத்து
பாசத்தின் எழுத்து
பரிதவிப்பின் எழுத்து
பிரிவின் எழுத்து
பிறப்பின் எழுத்து
முத்த எழுத்து
முக்தி எழுத்து
மரண எழுத்து
மானுட எழுத்து என
காலத்துக்கும் எழுத்தை
சுமந்த தபால்காரருக்கு
இன்னும் ஒற்றை விரலில்
வாய்க்கவில்லை
வாட்சப் எழுத்து…
- கவிஜி
இந்தக் காலில்
ஒரு கலர் செருப்பும்
அந்தக் காலில்
ஒரு கலர் செருப்பும்
போட்டுக் கொண்டு நடந்த
என் பாட்டிக்கு மட்டும்தான்
தெரியும்
என் நட்சத்திரங்களின்
நிறங்கள் பற்றி......
*****
மரங்களற்ற சோலையில்
மரமாகி
நின்று பார்க்கிறேன்
சற்று நேரமாவது
மனிதனாகி வெந்து சாகிறேன்.
*****
ஆத்தா சாகும் போது கடைசி
குட்டி பையன் நான் தான்.
ஆத்தா அப்படித்தான்
நினைத்துக் கொண்டிருக்கும்
அப்படியாவது இருந்து
கொள்கிறேன்
குட்டிப்பையனாகவே
என்றும்.....!
*****
பெரியம்மா வீட்டு ஞாயிறு
சித்தப்பா வீட்டு ஞாயிறு
மாமா வீட்டு ஞாயிறு
பாட்டி வீட்டு ஞாயிறு
அண்ணன் வீட்டு ஞாய
மாலை 5 மணி ஆகும் போதே ஊரெல்லாம் கட்டிய மைக் சீர்காழியின் குரலில் அதிரத் தொடங்கும். மனதுக்குள் கடலை மிட்டாய்களும்... தேன் மிட்டாய்களும் குதியாட்டம் போடத் துவங்கும்.
அம்மாவுக்கு தண்ணீர் பிடிக்க....காலை இட்லிக்கு மாவாட்ட.... இரவு சாப்பாடு வேகும் அடுப்பெரிக்க......வீடு பெருக்க.....என்று அதகளம் செய்வேன். நான் மட்டுமல்ல என் பக்கத்து வீட்டு சுமதி.....சங்கீதா.....குமார்...செல்வராணி.... சுப்பிரமணி...சிவக்குமார் என்று அவர்களும் அப்படித்தான். அந்த மாலை நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சு மிட்டாயைப் போல பிய்த்து வாய்க்குள் போட்டபடியே இருப்போம்.
அவ்வப்போது வாசல் வந்து நண்பர்கள் கூடி பேசிக் கொண்டு...." இ
சொல் இல்லை
வாக்கியம் நீள்கிறது...
புள்ளி அல்லாத புதிரெல்லாம்
சுழலும் உளரும் நீள் மீட்சி...
பற்றி படரும் தோள் தட்டித்
தொடரும் சுடரென தவழும்
மஞ்சள் நிழல்கள்...!
மைவிழிக்குள் மாதவம் உருள
மயக்கம் பொருள் கொய்யும்
அணைத்தல் விதி நெய்யும்...!
ஆடை சரிய அனைத்தும் விரிய
காரியம் எதுவோ
காந்த துகள்கள் ருதுவோ...!
சாத்திய சாளரம் வெட்கித் திறக்கும்
சாத்திர ஜாலம் முக்கி முனகும்.
குழலுக்கு உச்சமென ஒட்டிய
பூக்களின் உட்சவ சோலையின்
பட பட சட சட மிதமழை பின் சதைமழை...!
நிறமாரி உருமாறி நிழல்மாறி நிஜம்மாறி
நீ நானுக்குள் தவளைச்சத்தம்
நான் நீயுக்குள் பாம்பு முத்தம்...!
நித்தம் நீ பேசும் மொழிகள் -அதில்
என் பொழுது புலர வேண்டும்..
சத்தம் சிறிதுமின்றி உந்தன்
முத்தமழை எனக்கு வேண்டும்...
எந்தன் கைவளையல் அது வருட
உந்தன் கரங்கள் இரண்டும் வேண்டும்...
நான் சோர்ந்து போகும் அந்த நிமிடம்
உந்தன் சாந்த இருவிழி பார்வை அதுவேண்டும்..
மறைந்து போகும் இந்த வாழ்வில் - என்
மரணம் சற்று தூரம் வேண்டும்...
கண்கள் கண்ட என் கனவுகள் - உன்னால்
நினைவுகளாக வேண்டும்..
யாரும் இல்லா இடத்தில் நம் கால்கள்
நான்கும் நடைப்பயில வேண்டும்...
உயிரில் கலந்த எந்த உறவே ..
எந்தன் உயிர் பிரியும் அந்த தருணம்
கங்கையும் காவிரியையும்
ஈன்றெடுத்தவளை -இன்று ,
கருணைக்கொலை செய்துவிட்டோம்..
முப்போக விளைச்சலும்
மும்மாரி பொழிந்தவளை-இன்று ,
மூச்சடக்கி மடித்துவிட்டோம்..
சிக்காமல் பறந்த
சிட்டுக்குருவிகளையும் ,
சிட்டாய் சிறகடித்த தும்பிகளையும் -இன்று,
அழித்துவிட்டோம்..
கடல் நீரே குடிநீராய் அதுவும்
கானல் நீராய் போனததற்கான
காரணத்தை -இன்று ,
மறந்துவிட்டோம்...
கனல்வீசும் கோடையும்,
புனல்வீசும் அருவிகளையும்,
தென்றல்வீசும் சோலைகளையும் - ஏனோ - இன்று, இழந்துவிட்டோம்..
சாலையோர மரங்களையும் ,சந்தம்
பாடும் குயில்களையும் மறந்தோம் . பசுமை சரித்திரம்
மறந்த சந்ததிகளுமாய் -இன்று,
ஏனோ
பிறந்த மழலைக்கு கருப்பு வளையலிது
கண் திருஷ்டி காக்கிறது...
வளரும் குமரிக்கு வண்ண வண்ண வளையலிது
வசந்தத்தை தருகிறது..
அழகிய வளையோசை இது
வாசல் தோறும் ஒலிக்கிறது
வீணை இசைக்கும் கைகளிலே
கணக்காய் ராகமலிக்கிறது...
கோலமிடும் கைகளிலே
கொஞ்சிக்கொஞ்சி செல்கிறது
உடைந்து விழும் வளையலிலே
புது நாதம் ஒலிக்கிறது...
கல்யாண பெண்ணுக்கோ
நாணத்தை தருகிறது...
நிறைமாத தாய்மைக்கோ
நிம்மதியைத் தருகிறது..
ஏமாற்றம் ஒருநாள்
உன்னைத்தொடும் போதுதான்
உனக்குப்புரியும்....
உன்னால் ஏமாற்றப்பட்டவர்களின்
மனதில் ஏற்பட்டக்காயங்கள்
எத்தனை கொடூரமானது என்று...
எழுத்துத்தள உறவுகள் அனைவருக்கும் என் இனிய கார்த்திகை திருநாள் நல்வாழ்த்துக்கள்----ப்ரியா
உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன;உறவுகள் துண்டிக்கப்படுகின்றன. ஒரு வெற்றிடமே விரிகிறது. மிகவும் தொலைவில் தூரதேசத்தில் இருப்பதாக உணர்ந்து கொள்கிறோம்.
சில சமயம் நம் மனதிற்கு பிடித்தவர்களின் ஒரு நிமிட சந்தேக பேச்சால் நம் ஆயுள் சந்தோஷத்தையே இழக்கிறோம்..இதற்கு காரணம் நம்மீது தவறா? அவர்களின் சந்தேக மனப்பான்மையா?புரிதல் குறைபடா?
சில நேரங்களில்
நீ என்னைவிட்டு
தொலைந்து போவதாய்
தோன்றினாலும்....!!!!!!
பல நேரங்களில்
உன் நினைவுகளில்
என்னை நான்
தொலைத்துவிடுகிறேனடா....?
எத்தனையோ கண்கள்
என்னைத்தீண்டியும்
என்கண்கள் தேடுவது
உன்னைத்தான்
விலகி போகாதே
தொலைந்துபோவேனடா.......!!
விட்டுச்சென்ற பாதையிலும்
தைரியமாய் பயணிக்கிறேன்
பாதையின் முடிவில்
நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில்......!!