வரம் தருவாயா

நித்தம் நீ பேசும் மொழிகள் -அதில்
என் பொழுது புலர வேண்டும்..
சத்தம் சிறிதுமின்றி உந்தன்
முத்தமழை எனக்கு வேண்டும்...
எந்தன் கைவளையல் அது வருட
உந்தன் கரங்கள் இரண்டும் வேண்டும்...
நான் சோர்ந்து போகும் அந்த நிமிடம்
உந்தன் சாந்த இருவிழி பார்வை அதுவேண்டும்..
மறைந்து போகும் இந்த வாழ்வில் - என்
மரணம் சற்று தூரம் வேண்டும்...
கண்கள் கண்ட என் கனவுகள் - உன்னால்
நினைவுகளாக வேண்டும்..
யாரும் இல்லா இடத்தில் நம் கால்கள்
நான்கும் நடைப்பயில வேண்டும்...
உயிரில் கலந்த எந்த உறவே ..
எந்தன் உயிர் பிரியும் அந்த தருணம்
உந்தன் மடியில் நான் வாழ வேண்டும்...


வரம் தருவாயா??

எழுதியவர் : இரா. சுடர்விழி (10-Mar-17, 12:39 pm)
Tanglish : varam tharuvaayaa
பார்வை : 373

மேலே