சுடர்விழி ரா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சுடர்விழி ரா
இடம்:  அரியலூர்
பிறந்த தேதி :  23-Jul-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Dec-2014
பார்த்தவர்கள்:  1445
புள்ளி:  560

என்னைப் பற்றி...

●●●●தமிழ் பாரதியின் காதல் கண்ணம்மா●●●●
எதையோ தேடி ,
எங்கோ சென்று,
எப்படியோ வாழ்ந்து,
வீழ்ந்து
போவதை
மரணித்திலும் மன்னிக்காதவள்.....
அன்னையின்
ஆழமானஅன்பிற்கு அடிமையானவள்,,
ஆருயிர் தந்தைக்கு
உயிராவள்,,
நேசமிகு உயிர்தோழியைப்பெற்றதில் செருக்கானவள்,
தமிழின் மீது தீராக்காதல் கொண்ட பெண்ணானவள்,,
இயற்கையின் மீது
ஈடில்லாக்காதல்
கொண்டவள்......
♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤

என் படைப்புகள்
சுடர்விழி ரா செய்திகள்
சுடர்விழி ரா - சுடர்விழி ரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Apr-2022 12:18 am

இப்போதெல்லாம்


கனவில் தோன்றும்
காடுகளின்
அருவிகளில்
என் கால்கள்
தடம் பதிப்பதில்லை ..


நெடுநீண்ட
அலைகளில்
துள்ளும் மீனைக்
என் கைகள் தொட
நினைப்பதில்லை...


தனிமைநிரம்பிய
அறையாயினும்
துருப்பிடித்த
சாரளத்தின்
சந்தில்
சிலந்தியின்
சிறு தாவுதலை
ரசிக்க மனமில்லை...


றெக்கை முளைத்த
சிறுபறவையின்
சினுங்கள்கள்
என்
செவிதீண்டுவதில்லை...


பக்கத்து
வீட்டைநோக்கி
வளரும்
என் செடிகளை
பத்திரப்படுத்த முடியவில்லை...

மறக்கவேண்டும்
என
மனத்திரையிட்ட
முத்திரைகள்
யாவுமே
நினைவுகளின்
நிழலாய்
தொடர்வதால்......

மேலும்

நிதர்சனம்.. ஆம் ஐயா.. 06-May-2022 9:37 am
மனத்திரையிட்ட முத்திரைகள் தடுப்பதால் எதையும் திரைபோட்டு மறக்க இயலவில்லை. அருமையான படைப்பு கவிஞர் சுடர் விழி. 05-May-2022 6:46 pm
சுடர்விழி ரா - மலர்91 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-May-2022 4:28 pm

வாடி செவத்த பொண்ணு. சிம்முலாவில பொறந்து வளர்ந்து நல்லா செவப்பா வெள்ளைக்காரி மாதிரியே இருக்கிறயே. இந்தப் பாட்டியைப் பாக்க இவ்வளவு நாளு ஆச்சா? உம் பேரு என்னடி செவத்த சிங்காரி?

எம் பேரு அடா (Adah) பாட்டி.

அடடா அடா. உம் நல்ல பேரு டி. உம் பேரைக் கேக்கறவங்க எல்லாம் "அடடா, அடா"னுதான்டி சொல்லுவாங்க.

எந்த தங்கச்சி பேரு என்னவா இருக்கும்னு சொல்லுங்க பாட்டி பார்க்கலாம்.

உம் பேரு அடா. உந் தங்கச்சி பேரு சடா.
இதுகூட என்னால் சொல்லமுடியாதா அடடா அடா.

சரியாகச் சொன்னீங்க பாட்டி. எம் பேருக்கு அர்த்தம் இருக்குது. அவ பேருக்கு அர்த்தம் இல்லை ‌‌


இந்திப் பேருக்கெல்லாம் யாருடி அர்த்தம் பாத்து பேரு வைக்கிறாங்க!

மேலும்

சுடர்விழி ரா - மலர்91 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-May-2022 3:45 pm

என்னடா மச்சி கையில் திருமண அழைப்பிதழை வச்சிருக்கிற.‌ யாருக்குத் திருமணம்?
@@@@@
இன்னும் பார்க்கலடா. இப்பத்தான் வீட்டுக்கு வந்தேன். மேசை மேலே இந்த அழைப்பிதழ் இருந்தது..
@@@@@
சரி. அதைக் கொடு பார்க்கிறேன்.
(திருமண அழைப்பிதழில் உள்ள மணமகன், மணமகள் பெயர்களைப் படித்துப் பார்த்தவுடன்) டேய் மச்சி, உலக அதிசயம் நடக்குதா.
@@@@@@
என்னடா சொல்லுற?
@@@@@@
திருமணம் செய்யத் தகுதியானவங்க யாருடா?
@@@@@
சட்டப்படி திருமண வயதை அடைந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் அல்லது கணவனை இழந்த பெண்ணுக்கோ அல்லது மனைவியை இழந்த ஆணுக்கோ திருமணம் நடக்கும். ஆனா இந்த அழைப்பிதழ்படி.......
@@@@@@
அழைப்பிதழ்படி... என்னடா சொல்லுற?
@@@@@£
இந்

மேலும்

ராஜனிகாந்தினி இரவு நிலவின் வசீகரம்நீ அஜந்தா ஓவியம்போல் அழகிய சிலைநீ கஜனிமுஹமது போலநானும் காதல் படையெடுக்கவோ மஜந்தா சேலை கட்டிவாடி தமிழச்சிபோல் ___பிடித்ததா டாக்டர் மலர் 12-May-2022 9:52 pm
Nichchayamaaka 12-May-2022 9:24 pm
ரஜனிகாந்தினி என்ற தலைப்பில் நீங்கள் ஒரு கவிதையை படிக்கலாமே! 12-May-2022 9:07 pm
தங்கள் பொது அறிவும் அறிவியல் அறிவும் யாப்பு அறிவும் புலமையும் போற்றத்தக்கது கவிஞரே. வாழ்த்துக்கள். 12-May-2022 8:42 pm
சுடர்விழி ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2022 8:12 am

🎯 அஜந்தா குகை - 1983
🎯 எல்லோரா குகை - 1983
🎯 ஆக்ரா கோட்டை - 1983
🎯 தாஜ்மகால் - 1983
🎯 சூரியனார் கோயில் - 1984
🎯 மகாபலிபுரம் கடற்கரை கோயில் - 1985
🎯 கியோலேடியோ தேசிய பூங்கா - 1986
🎯 கஜுராஹோ சிற்பங்கள் - 1986
🎯 ஃபதேபூர் சிக்ரி - 1986
🎯 எலிஃபென்டா குகைகள் - 1987
🎯 தஞ்சை பெரிய கோயில் - 1987
🎯 தேவாலயங்கள் மடாலயங்கள் - 1986
🎯 ஹம்பி நினைவுச் சின்னங்கள் - 1986
🎯 பட்டாடக்கல் நினைவு சின்னங்கள் - 1987
🎯 சுந்தரவன பூங்கா - 1987
🎯 நந்தாதேவி தேசிய பூங்கா - 1988
🎯 சாஞ்சி புத்த மடாலயங்கள் - 1989
🎯 ஹுமாயூன் கல்லறை - 1993
🎯 குதுப்மினார் - 1993
🎯 இமாலயன் இரயில்வே - 1999
🎯 புத்தகயா மகாபோதி கோயி

மேலும்

சுடர்விழி ரா - சுடர்விழி ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Apr-2022 12:18 am

இப்போதெல்லாம்


கனவில் தோன்றும்
காடுகளின்
அருவிகளில்
என் கால்கள்
தடம் பதிப்பதில்லை ..


நெடுநீண்ட
அலைகளில்
துள்ளும் மீனைக்
என் கைகள் தொட
நினைப்பதில்லை...


தனிமைநிரம்பிய
அறையாயினும்
துருப்பிடித்த
சாரளத்தின்
சந்தில்
சிலந்தியின்
சிறு தாவுதலை
ரசிக்க மனமில்லை...


றெக்கை முளைத்த
சிறுபறவையின்
சினுங்கள்கள்
என்
செவிதீண்டுவதில்லை...


பக்கத்து
வீட்டைநோக்கி
வளரும்
என் செடிகளை
பத்திரப்படுத்த முடியவில்லை...

மறக்கவேண்டும்
என
மனத்திரையிட்ட
முத்திரைகள்
யாவுமே
நினைவுகளின்
நிழலாய்
தொடர்வதால்......

மேலும்

நிதர்சனம்.. ஆம் ஐயா.. 06-May-2022 9:37 am
மனத்திரையிட்ட முத்திரைகள் தடுப்பதால் எதையும் திரைபோட்டு மறக்க இயலவில்லை. அருமையான படைப்பு கவிஞர் சுடர் விழி. 05-May-2022 6:46 pm
சுடர்விழி ரா - சுடர்விழி ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Apr-2022 12:20 am

மௌனங்களை தூவலிட்டு
நினைவுகளின் முற்றத்தில்
நீந்திக்கொண்டிருக்கிறாய்-நீ!!

வரன்முறை மறந்து
வழக்கொழிந்து போன
வார்த்தைகளை
மீட்டெடுக்கிறேன்-இங்கு
உனக்காக நான்!!

வெகுநேரங்களில்
மனம்கூடி கனக்கிறது
கற்பனைகளால்ஆன
நமது பயணத்தின் தொடர்ச்சியில்!!

இக்கணமே
பூமி சுழற்சியை
நிறுத்திக்கொண்டாலும்
நினைவுகளுடன்
நீளும்
நம் பயணத்தில்
நான் மட்டும்
இங்கே
ஏதிலியாய்!!

மேலும்

நன்றி🙏 09-May-2022 8:09 am
அற்புதமான வரிகள். சிறப்பு💐💐💐💐. 07-May-2022 11:16 am
மகிழ்ச்சி.. நன்றி ஐயா.. 06-May-2022 9:36 am
சிறப்பு. தொடர்ந்திட வாழ்த்துகிறேன் 05-May-2022 6:42 pm
சுடர்விழி ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2022 11:27 am

1.பண்ருட்டி - பலாப்பழம்

2.சேலம் - மாம்பழம், வெண்பட்டு

3.மதுரை - மல்லிகைப்பூ, சுங்குடீப்புடவை, ஜிகர்தண்டா

4.திருவண்ணாமலை - சாமந்திப்பூ, அரளிப்பூ, குண்டுமாங்காய், ஏலக்கி வாழைப்பழம்

5.பழனி - பஞ்சாமிர்தம்

6.தூத்துக்குடி - மக்ரூன், உப்பு

7.கோவில்பட்டி - கடலைமிட்டாய்

8.திருநெல்வேலி - அல்வா

9.வில்லிபுத்தூர் - பால்கோவா

10.காரைக்குடி - கண்டாங்கி சேலை, செட்டிநாடு சமையல்

11.தஞ்சாவூர் - தலையாட்டி பொம்மை, வீணை, கலைத்தட்டு, ஒவியங்கள்

12.காஞ்சிபுரம் - பட்டுப்புடவை

13.திண்டுக்கல் - பூட்டு

14.ஆம்பூர் - பிரியாணி

15.சிவகாசி - பட்டாசு, நாட்காட்டி

16.திருப்பூர் - உள்ளா

மேலும்

சுடர்விழி ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2022 11:25 am

1. இராமநாதபுரம் : புனிதபூமி
2. ஈரோடு : மஞ்சள் நகரம்
3. கரூர் : நெசவாளர்களின் வீடு
4. கன்னியாகுமரி : இந்தியதென்நிலை எல்லை
5. காஞ்சிபுரம் : ஏரி மாவட்டம்
6. கோயம்புத்தூர் : தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
7. சிவகங்கை : சரித்திரம் உறையும் பூமி
8. சென்னை : தென்னிந்தியாவின் கலாச்சார நுழைவாயில்
9. சேலம் : மாம்பழ நகரம்
10. தஞ்சாவூர் : நெற்களஞ்சியம்
11. தருமபுரி : தோட்டபயிர் பூமி
12. திண்டுக்கல்: பூட்டுநகரம்
13. திருச்சி : மலைக்கோட்டை நகரம்
14. திருநெல்வேலி : தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு
15. திருப்பூர் : தமிழ்நாட்டின் பின்னலாடைத் தலைநகரம்
16. தூத்துக்குடி: முத்துநகரம்
17. தேனி : இயற்கை வி

மேலும்

சுடர்விழி ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2022 11:23 am

1.கவியரசர் -கண்ணதாசன்
2.கவிப்பேரரசு-வைரமுத்து
3.கவிராட்சசர்-ஒட்டக்கூத்தர்
4.கூலவாணிகன்-சீத்தலைச் சாத்தனார்
5.மதுரகவி-பாஸ்கரதாஸ்
6.பாவலரேறு-பெருஞ்சித்திரனார்
7.பண்டிதமணி-கதிரேசஞ் செட்டியார்
8.பன்மொழிப் புலவர்-கா.அப்பாத்துரையார்
9.அழுது அடியடைந்த அன்பர்-மாணிக்கவாசகர்
10.தமிழ் தாத்தா-உ.வே.சாமிநாத அய்யர்
11.கவிச்சக்கரவர்த்தி-கம்பர்
12.தேசிய கவிஞர்-பாரதியார்
13.கவியோகி-சுத்தானந்த பாரதியார்
14.உவமை கவிஞர்-சுரதா
15.பாவேந்தர்-பாரதிதாசன்.
16.மக்கள் கவிஞர்-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
17.கவிமணி-தேசிக விநாயகம் பிள்ளை
18.காந்தியக் கவிஞர்-இராமலிங்க பிள்ளை
19.திராவிட சாஸ்திரி-பரிதிமாற் கலைஞர்
20.சொல்லின் செ

மேலும்

அரசஞ் சண்முகனார், சோழவந்தான் 17-Oct-2022 6:08 pm
சுடர்விழி ரா - மலர்91 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-May-2022 8:53 pm

ஏன்டா பசங்களா, சின்னவனே, பெரியவனே, உங்க (இ)ரண்டு பேருக்கும் (இ)ரண்டு வயசு வித்தியாசம். ஒரே நாள்ல உங்க (இ)ரண்டு பேருக்கும் ஒரே நாள்ல திருமணம் செஞ்சு வச்சோம். திருமணம் முடிஞ்ச கையோட வெளிநாட்டுக்குப் போயிட்டீங்க. (இ)ரண்டு பேருக்கும் ஒரே நாள் ஆண் பிள்ளைகள் பொறந்ததா தகவல் அனுப்பினீங்க. கொழந்தைங்க பொறந்து நாலு வருசம் கழிச்சு (இ)ரண்டு பேரும் குடும்பத்தோட வந்திருக்கீங்க. ரொம்ப சந்தோசம் டா பசங்களா. பசங்களுக்கு என்ன பேருங்கள வச்சிருக்கறீங்க?

சின்ன மகன்: அம்மா, என் மனைவி உண்டானதும் நான் அவளுக்கு பையன் தான் பொறக்கணும்னு நம்ம தமிழ்க் கடவுள் திருமுருகப் பெருமான் கிட்ட வேண்டிட்டேன். பையனுக்கு வைக்கப் போற

மேலும்

விளம்பரங்கள் படங்களுடன் வருவதால் தங்கள் கருத்தைப் பார்க்க இயலவில்லை. 05-May-2022 6:32 pm
தெரியும் கவிஞரே. எங்கள் எதிர் வீட்டுக்கு அந்த அம்மாவின் தம்பி பையன் வாரத்திற்கு நாலு அ ஐந்து தடவை வருவான். அவனை 'சித்து' என்று அழைப்பார்கள். நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் கிராமத்தில் 'சித்தன்' என்ற பெயருடைய ஒருவர் இருந்தார். ஒரு தொலைக்காட்சித் தொடரில் கதாநாயகன் பெயர் 'சித்தார்த்'. அழகானவர். வசதியான குடும்பம். எம்.பி.ஏ படித்த அவருக்கு அவர் (இயற்கை எய்திய) அவரது தாயாரின் தோழியின் படிப்பறிவில்லாப் பெண்ணை மணமுடிக்கிறார்கள். தாயின் ஆசை. அதைத் தட்டமுடியவில்லை. அவர் மணமானவர் என்றாலும் அவரை வளைத்துப் போட்டு முதல் மனைவியை மணமுறிவு செய்ய வைத்து மணந்துகொள்ள ஆசைப்படுகிறாள் அவருடன் பணியாற்றும் ஒரு பெண். அந்த 'சித்தார்த்'தை அவள் 'சித்' என்றுதான் அழைப்பாள். 04-May-2022 10:06 pm
சித்தார்த் புத்தரின் இயற்பெயர் 04-May-2022 8:57 pm
சுடர்விழி ரா - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-May-2022 5:53 pm

சேத்திரத் திருவெண்பா, ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (பல்லவ முதலாம் பரமேஸ்வரன்
கி.பி 670 – 675) பாடியது.

நேரிசை வெண்பா

இழவாடிச் சுற்றத்தார் எல்லாருங் கூடி
விழவாடி ஆவிவிடா முன்னம் - மழபாடி
ஆண்டானை ஆரமுதை அன்றயன்மால் காணாமை
நீண்டானை நெஞ்சே நினை. 18

குறிப்புரை :

(இவ்வெண்பாக்கள் யாவும் `யாக்கை (இந்த மானிடப் பிறப்பில் நாம் பெற்ற உடலின்) நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்பொழுதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்` என்பதையே அறிவுறுத்துகின்றன).

இவ்வெண்பா, '’இவர் இறந்துவிட்டார் என்று உறவினர்கள் இழவுதனை விழாவாகக் கொண்டாடும்படி உயிரை விடுவதற்கு முன்பாக’ மழபாடியில் உறையும் ஆண்டவனாகிய சிவபெர

மேலும்

மிக்க மகிழ்ச்சி ஐயா.. 09-May-2022 8:09 am
பா மணி டாக்டர அவர்களுக்கு வணக்கம் பொன்னார் மேனியனே புலித்தோலை அருகசைத்தவனே மற்றும் தோடுடை செவியன் என்ற இரு பாடல்களும் மிகப் பிரசித்திப் பெற்ற பாடல்கள் அருமை ஐயா. சிவன் கனவில் தோன்றி மழப்பாடி வரச்செய்தார் என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் நெகிழ்கிறது 08-May-2022 12:06 pm
மிக நன்று அம்மா! என் சிறுவயதில் 1957 ல் என் மாமா திருமழபாடியில் (கோவிலுக்குச் சென்றதில்லை) வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணி செய்த பொழுது விடுமுறைக்கு ஒரு வாரம் வந்து தங்கியிருந்தேன்; சென்ற இரு வாரங்கள் முன், திருச்சி சென்று திருநெடுங்குளம், திருப்பட்டூர் (வைப்புத்தளம்), திருவாசி சென்று வந்தேன். 07-May-2022 10:22 pm
இது எங்கள் ஊர் ஐயா🙏 05-May-2022 11:21 am
சுடர்விழி ரா - சுடர்விழி ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jun-2021 2:48 pm

என்னுள்
தோன்றிய
கிறுக்கல்களும்
கிறங்கிக்கிடக்கின்றன
உன்னை
ரசிக்கும்
என்
மன
பிம்பத்திடமும்.....

மேலும்

நன்றிகள் ஐயா 12-Jun-2021 9:55 pm
குறுங்கவிநை என்றாலும் ஒரு பெண்ணின் உள்ளக் கிடக்கையை எளிமையாக உரைக்கிறது. 11-Jun-2021 4:25 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (68)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
வாசு

வாசு

தமிழ்நாடு
பா நிபி

பா நிபி

கொடைக்கானல்

இவர் பின்தொடர்பவர்கள் (72)

நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (73)

ப்ரியா

ப்ரியா

கன்னியாக்குமரி மாவட்டம்
சீனி

சீனி

மதுரை
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே