சித் பெத்

ஏன்டா பசங்களா, சின்னவனே, பெரியவனே, உங்க (இ)ரண்டு பேருக்கும் (இ)ரண்டு வயசு வித்தியாசம். ஒரே நாள்ல உங்க (இ)ரண்டு பேருக்கும் ஒரே நாள்ல திருமணம் செஞ்சு வச்சோம். திருமணம் முடிஞ்ச கையோட வெளிநாட்டுக்குப் போயிட்டீங்க. (இ)ரண்டு பேருக்கும் ஒரே நாள் ஆண் பிள்ளைகள் பொறந்ததா தகவல் அனுப்பினீங்க. கொழந்தைங்க பொறந்து நாலு வருசம் கழிச்சு (இ)ரண்டு பேரும் குடும்பத்தோட வந்திருக்கீங்க. ரொம்ப சந்தோசம் டா பசங்களா. பசங்களுக்கு என்ன பேருங்கள வச்சிருக்கறீங்க?

சின்ன மகன்: அம்மா, என் மனைவி உண்டானதும் நான் அவளுக்கு பையன் தான் பொறக்கணும்னு நம்ம தமிழ்க் கடவுள் திருமுருகப் பெருமான் கிட்ட வேண்டிட்டேன். பையனுக்கு வைக்கப் போற பேரையும் முடிவு பண்ணீட்டேன். அதை அண்ணன் கிட்டச் சொன்னேன். அவரும் அவர் மனைவிக்கு பையன் பொறந்தா அவர் என்னைவிட மூத்தவர் என்ற முறையில் அதுக்குத் தகுந்த மாதிரி பேரை அவர் பையனுக்கு பேரு வைக்கிறார் முடிவு பண்ணீட்டாரு.

சரிடா சின்னவனே பசங்க பேருங்களச் சொல்லுங்கடா. நீ உம் பையனைப் 'சித்'னு கூப்பன். பெரியவன் அவள் பையனைப் 'பெத்'னு கூப்பிடறான். இதுதான் அவுங்க பேருங்களா?

இல்லம்மா. என் மனைவி உண்டானதும் நான் எனக்ககுப் பையன் பொறந்தா 'சித்தார்த்'னு பேரு வைக்க முடிவு பண்ணினேன். அண்ணன்கிட்டச் சொன்னதும் அவருக்கு பையன் பொறந்தா அவரு பையனுக்கு 'பெத்தார்த்'னு பேரு வைக்கிறார் முடிவு பண்ணிட்டாரு.

ஓ.... அதுதான் 'சித்', 'பெத்'ஆ?

இல்லம்மா மொதல்ல 'சித்தார்த்'தை 'சித்து'னு கூப்பிட்டோம். அதையும் சுருக்கி 'சித்'னு கூப்பிட ஆரம்பிச்சோம். அண்ணன் பையன் 'பெத்தார்த்'தை 'பெத்து'னு கூப்பிட்டோம். 'பெத்து'வைச் சுருக்கி 'பெத்'னு கூப்பிடறோம்.

நல்லாப் பேருங்கள வச்சீங்கடா. 'சித்'. 'பெத்'. இன்னொரு பையன் பொறந்தா அந்தப் பையனுக்கு 'சத்தார்த்'னு வச்சு, அதைச் சுருக்கி 'சத்து', அதையும் சுருக்கி 'சத்'னு கூப்பிடுடா.

எழுதியவர் : மலர் (4-May-22, 8:53 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 41

மேலே